Share via:
மீண்டும் மத்திய அமைச்சராக வலம் வர வேண்டும் என்று ஆசைப்பட்டுத்
தான் அன்புமணி இத்தனை நாட்களும் பா.ஜ.க.வுடன் போராடிக்கொண்டு இருந்தார். கடைசியாக கிடைத்த
தகவல்கள் படி, ராஜ்யசபா சீட்டுக்கும் அமைச்சர் பதவிக்கும் பா.ஜக.வில் வாய்ப்பே இல்லை
என்று கூறிவிட்டார்களாம்.
அதனால் ராமதாஸ் சொல்வதைக் கேட்டு அ.தி.மு.க.வுடன் சங்கமிப்பதற்கு
அன்புமணி தயாராகிவிட்டாராம். எடப்பாடி பழனிசாமி 7 சீட்டும் ஒரு ராஜ்யசபா சீட்டும் கொடுப்பதற்குத்
தயாராக இருக்கிறார். அதோடு, தேர்தல் செலவையும் கவனித்துக்கொள்வதாக உறுதி அளித்திருக்கிறார்.
இன்று மோடி விசிட் முடிந்த பிறகு பா.ம.க.வின் அ.தி.மு.க. கூட்டணி
அறிவிப்பு வெளியிடுவதற்கு வாய்ப்பு உண்டு என்று சொல்லப்படுகிறது. அதேபோல் அ.தி.மு.க.
கூட்டணியில் பிரேமலதாவுக்கு 4 சீட் கொடுக்கப்பட இருக்கிறது. எஸ்.டி.பி.ஐ., கிருஷ்ணசாமி,
ஃபார்வர்டு பிளாக், புரட்சி பாரதம் என்று மெகா கூட்டணிக்கு வழி வகுத்திருக்கிறார் எடப்பாடி
பழனிசாமி.

