News

விஜய் பல்ஸ் பார்க்கிறாரா பிரஷாந்த் கிஷோர்..? தைப்பூச வாழ்த்து சர்ச்சை

Follow Us

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள, ‘இந்தியா’ கூட்டணியின் 3வது கூட்டம் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்றும் நாளையும் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்கும் ஸ்டாலின், பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்தும் ஆலோசனையை தெரிவிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த கூட்டத்தில் ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, மம்தா பானர்ஜி, முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, என்சிபி (சரத்சந்திர பவார்) தலைவர் சரத் பவார் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்ப இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக, முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை மும்பை செல்கிறார். இந்த கூட்டத்தில், பிரதமர் வேட்பாளர் பற்றி முக்கிய முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின் இரவில் சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே அளிக்கும் விருந்திலும் பங்கேற்கிறார்.

அதோடு ராகுல் காந்தியின் நீதி யாத்திரை நாளை நிறைவடைகிறது. மணிப்பூர் முதல் மகாராஷ்டிரா வரை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஜனவரி 14ம் தேதி தொடங்கிய  நீதி யாத்திரை 6200 கி.மீ. தூரம் கடந்து மும்பையில் நாளை யாத்திரையை நிறைவு செய்கிறார்.

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை வலியுறுத்துவதற்கு ஸ்டாலின் விருப்பமாக இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதுவே, இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு வழி வகுக்கும் என்றாலும் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இதற்கு சம்மதம் தெரிவிப்பது சந்தேகமே என்கிறார்கள்.

எப்படியோ, தேர்தல் பத்திரம் வெளியீட்டுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் ஒன்று கூடுவதால், இந்த கூட்டம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link