Share via:
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர்களில் நிறைய பேர்
வாரிசுகள் என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் கடுமையாக முன்வைத்து வருகிறார்கள். எனவே,
சில வாரிசுகளுக்கு சீட் இல்லை என்று கூறப்பட்டு வந்தது.
ஆனால், தி.மு.க.வின் உத்தேசப் பட்டியலில் வாரிசு வேட்பாளர்களில்
பெரிய அளவுக்கு மாற்றம் இல்லை. எனவே, பெரும்பாலான வேட்பாளர்கள் அப்படியே அதே தொகுதியில்
நிற்கிறார்கள். கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் நின்றால் தோற்றுவிடுவார் என்று ஐ.டி.
விங்க் கொடுத்த ரிப்போர்ட்டை ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லையாம்.
துரைமுருகனை இப்போது தேவையில்லாம உரச வேண்டாம் என்று கதிர் ஆனந்துக்கு
சீட் கொடுக்க முடிவு செய்திருக்கிறாராம். இதோ, உத்தேசப் பட்டியல்.
1. வடசென்னை – கலாநிதி வீராசாமி
2. தென் சென்னை – தமிழச்சி தங்கப்பாண்டியன்
3. மத்திய சென்னை – தயாநிதி மாறன்
4. ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு
5. காஞ்சிபுரம் – வழக்கறிஞர் செல்வம்
6. அரக்கோணம் – ஜெகத்ரட்சகன்
7. திருவண்ணாமலை – அண்ணாதுரை அல்லது எஸ்.கே.பி.கருணாகரன்
8. வேலூர் – கதிர் ஆனந்த்
9 .தருமபுரி – டாக்டர் செந்தில்குமார்
10. கள்ளக்குறிச்சி – பொன்.கௌதம சிகாமணி
11. கடலூர் – எம்.ஆர்.கே.பி.கதிரவன்
12. கரூர் – கோயம்பள்ளி பாஸ்கரன் அல்லது பரணி மணி
13. நீலகிரி – ஆ.ராசா
14.பொள்ளாச்சி – சண்முகசுந்தரம்
15. தஞ்சாவூர் – அஞ்சுகம் பூபதி
16.தென்காசி – தனுஷ் குமார்
17.திருநெல்வேலி – கிரகாம்பெல், ஞானதிரவியம் அல்லது அலெக்ஸ் அப்பாவு
18. தூத்துக்குடி – கனிமொழி
19.கோவை – டாக்டர்.மகேந்திரன் அல்லது விசாகன் வணங்காமுடி
20.பெரம்பலூர் – அருண் நேரு
21.சேலம் – பி.கே.பாபு
கதிர் ஆனந்த், கெளதம சிகாமணியை மட்டும் பட்டியலில் இருந்து தூக்குங்க
தலைவரே தி.மு.க.வினர் கெஞ்சிவரும் நேரத்தில் புதிதாக அப்பாவு மகனுக்கும் நேரு மகனுக்கும்
சீட் கொடுக்கிறாங்களாம்.