Share via:
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவசரகதியில் சிஏஏ சட்டத்தை
மத்திய அரசு அமல்படுத்தியுள்ளதாக கூறியிருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில்
குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இந்த சட்டத்தினால் எந்தவிதமான நன்மையோ, பயனோ இருக்கப்போவதில்லை
என்பதால் சிஏஏ சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே அரசின் கருத்து என்று கூறியிருக்கிறார்.
இந்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று ஸ்டாலின்
கூறியிருப்பது போலவே கேரளா, மேற்குவங்கம், பீகார், ராஜஸ்தான், ஆந்திரா, சத்தீஸ்கர்,
பஞ்சாப் உள்ளிட்ட 9 மாநிலங்கள் கூறியிருக்கின்றன.
மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை அமல்படுத்த முடியாது
என்று ஒரு மாநில அரசு மறுப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. மேலும், இந்த
சட்டத்தை மறுக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை என்று மத்திய அரசு கூறிவருகிறது.
இதையே அண்ணாமலையும் ஸ்டாலினால் இந்த சட்டத்தை தடுக்கவே முடியாது என்று சவால் விடுகிறார்.
அதேநேரம், ‘இது மதச்சார்பின்மை நாடு. எனவே, மதப் பாகுபாடு கூடாது.
எனவே சி.ஏ.ஏ.சட்டம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று இந்த மாநிலங்கள் உச்ச
நீதிமன்றத்தை அணுக முடியும். இதன் மூலம் இந்த சட்டத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்யலாம்
என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.
அத்தனை மாநிலங்களும் ஒன்றிணைந்து நீதிமன்றம் செல்லுமா..?