Share via:
தற்போது தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக
இருக்கும் தமிழிசை செளந்தர்ராஜன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
கடந்த சில மாதங்களாகவே மத்திய அமைச்சர் பதவிக்கு கணக்குப் போட்டு
காய் நகர்த்திவந்தார் தமிழிசை. அதனாலே ஆளும் தி.மு.க. அரசுடன் நேரடியாக மோதல் நடவடிக்கையில்
ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் புதுவையில் ரங்கசாமி கட்சி போட்டியிடப்போவதில்லை
என்று அறிவிக்கப்பட்டதுமே, அங்கு பா.ஜக. சார்பில் தமிழிசை நிற்கப்போகிறார் என்று சொல்லப்பட்டது.
இதனை உண்மை என்று நிரூபிக்கும் வகையில் இன்று தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
இன்று மோடியுடன் மீட்டிங்கில்
கலந்துகொள்ளும் எண்ணத்தில் இருக்கும் தமிழிசையை இன்றே வேட்பாளராக அறிவிக்கவும் வாய்ப்பு
இருப்பதாக கருதப்படுகிறது. உள்ளதும் போச்சுடா என்ற கதையாக மாறாமல் இருந்தால் சரிதான்.