Share via:
பிரதமர் நரேந்திர மோடியின் ரோடு ஷோ பிரமாண்ட வெற்றி என்று அண்ணாமலை
தரப்பும் படு தோல்வி என்று தி.மு.க. தரப்பும் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில்
அவர் குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதும், பள்ளி மாணவிகள் கட்டாயமாக
கலந்துகொள்ள வைத்ததும் சர்ச்சையை எழுப்பியிருக்கிறது.
இதுகுறித்து தி.மு.க.வின் ராஜிவ்காந்தி, ‘கோவை மாவட்டத்தில் உள்ள
பெரும்பாலான டெம்போ டிராவலர் வண்டிகளை அரைநாள் வாடகை 5500 ரூபாய் என பேசி முன்பதிவு
செய்து இருந்தனர்! ஒரு நபருக்கு 300 ரூபாய் என கூலிக்கு வட இந்திய இளைஞர்களிடமும்,
உள்ளூர் ஆட்களுக்கு 400 ரூபாய் என பேசி நேற்று மதியத்தில் இருந்தே ஆட்களை ஏற்ற ஆரபித்தனர்!
ஆனாலும் பெரும்பாலான வாகனங்கள் இருக்கை காலியாக செல்வதே தான் பார்க்க முடிந்தது.
பிரதமர் மோடி பேரணி தொடங்கிய சாய்பாபா கோவில் இடத்திலும் பேரணி
முடித்த RS புரத்தில் மட்டும் தான் கொஞ்ச கூட்டம் மற்ற 2.30 KM தூரத்திலும் பொதுமக்கள்
யாரும் வரவில்லை. யாருமே இல்லா கடையில் யாருக்கு தான் டீ ஆத்துகிறோம் என்பது போல்
“மோடி” டீ ஆத்தி கொண்டும் கூடுதலாக வடை சுட்டு கொண்டும் இருந்தார்! கோவையில் பாஜகவின்
வெறுப்பு அரசியல் முடிவுக்கு வரும் காலம் இது என்பதற்கு நேற்று நடந்த மோடியின் ரோடு
சோ கூத்துதான் சாட்சி’ என்று கூறியிருக்கிறார்.
அதேநேரம், இந்த பேரணிக்கு வந்த பள்ளி மாணவிகளுக்கு அனுமதி கொடுத்தது
யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருக்கும் மகேஸ் இதற்கு
பதில் சொல்ல வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
கோவை குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய மோடி
குஜராத் கலவரத்தில் இறந்தவர்கள், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள், ஒக்கி
புயலில் இறந்தவர்கள், மணிப்பூர் கலவரத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தாதது ஏன்
என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
இன்று சேலம் பிரதமர் விசிட்டில் என்னென்ன பஞ்சாயத்துகளோ…