Share via:
தமிழகத்தில் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் இன்னமும் கூட்டணிப் பேச்சுவார்த்தையே
முடிக்காமல் ஜவ்வாக இழுத்துவரும் நிலையில், கூட்டணியை முடிவு செய்துவிட்ட தி.மு.க.
இப்போது தொகுதிப் பங்கீட்டையும் அறிவிக்கத் தொடங்கிவிட்டது.
ஏற்கெனவே ராமநாதபுரம் தொகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு
தி.மு.க. ஒதுக்கிவிட்டது. இந்த நிலையில், திமுக கூட்டணியில் மக்களவை தேர்தலில் இந்திய
கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம், திருப்பூர் ஆகிய இரண்டு தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது திருப்பூர் தொகுதியில் எம்.பி.யாக இருக்கும் சுப்பராயனே
மீண்டும் நிற்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நாகப்பட்டினம் தொகுதியில்
4 முறை எம்பியாக இருந்த செல்வராசுவுக்குப் பதிலாக வேறு வேட்பாளரை களம் இறக்க இருக்கிறார்கள்.
அதேபோல், மதுரை, திண்டுக்கல் ஆகிய தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் என்று ஸ்டாலின் முன்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது.
மதுரையில் தற்போது எம்.பி.யாக இருக்கும் சு. வெங்கடேசன் மீண்டும்
களம் இறங்குகிறார். அதேநேரம் திண்டுக்கல்லில் பெ.சண்முகம் அல்லது பாலபாரதி போட்டியிட
வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த முறை ஈரோட்டில் நின்ற ம.தி.மு.க.வுக்கு இந்த முறை விருதுநகர்
ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. துரை வைகோவை களம் இறக்க தி.மு.க. விருப்பம் தெரிவித்துள்ளதாம்.

