Share via:
ஜாபர் சாதிக்கை
டெல்லியில் கைது செய்தோம் என என்.சி.பி. அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தாலும்,
அவர் ஜெய்ப்பூரில் இருந்து பாகிஸ்தானுக்குத் தப்பியோட திட்டமிட்டிருந்ததாக பல்வேறு
செய்திகள் வெளிவருகின்றன.
அதேபோல் ஜாபர் சாதிக்கிடம்
விசாரணை நடக்கும் முன்னரே, அவர் தி.மு.க.வுக்கு 7 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார் என்று
செய்திகள் திட்டமிட்டுப் பரப்பட்டு வருகின்றன.
அதேபோல் போதைக் குற்றவாளிகளை
கைது செய்திருக்கும் டெல்லி ஸ்பெஷல் செல்லுக்கு இதனை விசாரிக்கும் அதிகாரம் இருக்கும்
நிலையில், என்.சி.பி.யிடம் திட்டமிட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் போதை
கடத்தல், தீவிரவாதம், ஆயுதக்கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளை சாதிக் மீது போட்டு தி.மு.க.
அரசுக்கு துணி நின்றதாக சமூகவலைதளங்களில் தீவிரமாக செய்திகள் வெளியாகின்றன. போதை கடத்தல்
தி.மு.க. என்ற ஹேஸ்டேக் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.
எடப்பாடி பழனிசாமி,
அண்ணாமலை ஆகியோர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஜாபர்சாதிக்
விவகாரம் குறித்து அமீத் ஷா தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகவும், இதன் மூலம் தமிழக
அரசை கலைக்க முடியுமா என்று ஆலோசனை நடப்பதாகவும் தெரிவிக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல்
நெருங்கும் நேரத்தில் தி.மு.க.வின் வெற்றியைத் தடுப்பதற்கும் மக்களை திசை திருப்பவும்
இந்த விவகாரத்தை பெரிதாக்குவதாக தி.மு.க.வினர் கொதிக்கிறார்கள்.