Share via:
ஒவ்வோர் ஆண்டும் மகளிர் தினக் கொண்டாட்டம் அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் பிரமாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இன்றும் பிரமாண்ட சைஸ் கேக் வெட்டி எடப்பாடி பழனிசாமி கொண்டாடினார்.
முன்னதாக சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி, ‘’இந்த இனிய நன்னாளில் தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் மகளிர் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இன்று கேக் வெட்டி கொண்டாடிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிறகு, ’’2 கோடி தொண்டர்களின் விருப்பப்படி பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை’’ என்று தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, ‘’பத்திரிகையாளர்களே நீங்கள் நலமாக இருக்கிறீர்களா… விடியா ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை’’ என்று ஸ்டாலின் புதிய திட்டத்தை கிண்டல் செய்தார்.
அதோடு வரும் மார்ச் 12ம் தேதியன்று தமிழகத்தை போதை மாநிலமாக மாற்றி போதை பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் மார்ச் 12ல் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.