Share via:
![](https://tamilnewsnow.com/wp-content/uploads/2024/03/GIPQy1pXkAAQplL.jpeg)
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனான திமுக நிர்வாகி
ஜாபர் சாதிக்கை, தேசிய போதைப்பொருள் தடுப்பு ஆணையம் டெல்லியில் கைது செய்துள்ளது.
இது குறித்து அண்ணாமலை, ‘கடந்த 3 ஆண்டுகளில், பல திமுக தலைவர்களுடன்
ஜாபர் சாதிக் நெருக்கமாக இருந்த நிலையில், பணமோசடி செய்ய, ஜாபர் சாதிக் எவ்வாறு அவர்களுக்கு
உதவியாகச் செயல்பட்jடார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
விசாரணை அதிகாரிகள், முழுமையான விசாரணை மேற்கொண்டு, ஜாபர் சாதிக்
தொடர்புடைய நபர்கள் அனைவரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து, தமிழகத்தில் திமுக ஆட்சியில்
மிக எளிதாகப் பரவியிருக்கும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு தடைசெய்யப்படுவதை
உறுதிசெய்யுமா?’’ என்று கேட்டுள்ளார்.
இதே போன்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி,
‘’திமுக அயலக அணி மாவட்ட அமைப்பாளராக இருந்த ஜாபர்சாதிக் 3ஆண்டுகளாக 3500கிலோ போதைப்பொருள்
தயாரிப்புக்கான மூலப்பொருட்களை கடத்தியுள்ளதாகவும், திமுக மற்றும் அதனைச் சார்ந்தோருக்கு
ஜாபர் சாதிக் நிதியளித்துள்ளதாக தொடர்ந்து செய்திகள் வந்துள்ளன.
அந்த போதைப்பணத்தில் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளித்துள்ளதாக
என்.சி.பி. துணை இயக்குனர் அதிகாரபூர்வமாக இன்று அறிவித்த நிலையில், தன்னுடைய ஆட்சியில்
தன் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கும் போதே, 3 ஆண்டுகளாக போதைப்பொருள் மாபியா நடத்தி
வந்த ஜாபர் சாதிக்கை பிடிக்காமல் விட்டதோடு அல்லாமல், அவனுக்கு திமுகவில் கட்சி அங்கீகாரமும்
அளித்த முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியும் அவர்களுடைய
சமுகவலைதள பக்கத்தில் பதிவிட்டு பின்பு டெலிட் செய்யப்பட்ட பதிவுகளில் இருந்தே ஜாபர்
சாதிக்குடன் நெருக்கம் காட்டியது தெரியவருவதாலும், அதை சார்ந்த செய்திகள் தொடர்ந்து
வெளிவருவதாலும், தார்மீக பொறுப்பேற்று இருவரும் உடனடியாக பதவி விலக வேண்டும்’’ என்று
கோரிக்கை வைத்துள்ளார்.
அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் இந்த விவகாரத்தில் தி.மு.க.வை டார்கெட்
செய்துவருவதால்… தி.மு.க. திகைத்து நிற்கிறது.