Share via:
தி.மு.க. கூட்டணி முழுமையாக முடிவுக்கு வந்த பிறகும் அ.தி.மு.க.
மற்றும் பா.ஜ.க. கூட்டணியில் குழப்ப நிலை நீடிக்கிறது. அதற்கு ஒரே காரணம் பாட்டாளி
மக்கள் கட்சியின் பேராசை பேச்சுவார்த்தை என்று சொல்லப்படுகிறது.
இந்த முறை எப்படியும் தி.மு.க.வில் இணைந்துவிட வேண்டும் என்றே
ராமதாஸ் ஆசைப்பட்டார். ஆனால், திருச்சியில் வி.சி.க மாநாட்டில் ஸ்டாலின் அதற்கு வாய்ப்பே
இல்லை என்ற நிலைப்பாட்டை தெளிவாக உணர்த்திவிட்டார்.
இதையடுத்து வழக்கம் போல ஒரே நேரத்தில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வுடன்
பேச்சுவார்த்தையை பா.ம.க. நடத்திவருகிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க. தங்களது கூட்டணியில் இருந்த
காரணத்தாலே 25 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. எனவே, எப்படியும் பா.ம.க.வை
உள்ளே கொண்டுவந்துவிட வேண்டும் என்பதற்காக சி.வி. சண்முகம் மூலம் ராமதாஸுடன் பேச்சுவார்த்தை
நடத்திவருகிறார் எடப்பாடி பழனிசாமி.
நாடாளுமன்றத் தேர்தல் பேச்சுவார்த்தையின் போதே மாநிலங்களவை எம்.பி.
மற்றும் சட்டமன்றத் தேர்தலில் அன்புமணியை துணை முதல்வர் என்று அறிவிக்க வேண்டும் என்று
ராமதாஸ் கோரிக்கை வைத்திருப்பதாலே பேச்சுவார்த்தை இன்னமும் இழுபறியில் இருக்கிறது.
அதேநேரம் அன்புமணி ராமதாஸ் பா.ஜ.க. தலைவர்களுடன் பேச்சுவார்த்தை
நடத்திவருகிறார். மோடியின் புதிய ஆட்சியில் மத்திய அமைச்சர் பதவிக்கு உறுதி வழங்கப்பட்டால்
கூட்டணிக்கு ரெடி என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார். இதற்கு பா.ஜ.க. இன்னமும் ஒப்புக்கொள்ளவில்லை.
தங்கள் கைவசம் இருக்கும் இரண்டு சி.பி.ஐ. வழக்குகளை சுட்டிக் காட்டி
அன்புமணியை பா.ஜ.க. மடக்குமா அல்லது பணத்தைக் கொடுத்து எடப்பாடி ராமதாஸை மடக்குவாரா
என்பது இரண்டு நாட்களில் தெரிந்துவிடும்.