Share via:
சமீபத்தில் நடந்த தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தின்
முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, ‘நாடாளுமன்ற தேர்தலில் 14 மக்களவை தொகுதிகள்
மற்றும் ஒரு ராஜ்யசபா இடம் கொடுக்கும் கட்சியுடன்தான் கூட்டணி’ என அறிவிப்பு வெளியிட்டார்.
இதையடுத்து சில நாட்களில், ’14 தொகுதிகள் என்பது மாவட்டச் செயலாளர்கள் கேட்ட தொகுதி,
தலைமையின் நிலைப்பாடு அது அல்ல’ என்று சட்டென்று இறங்கிப் பேசினார்.
முதலில் பேச்சுவார்த்தைக்கு முன்வந்த பா.ஜ.க., தாமரை சின்னத்தில்
போட்டியிடுவதாக இருந்தால் 10 தொகுதிகள் தருவதற்கு தயாராக இருந்தது. அதேநேரம், கடந்த
தேர்தலில் கழட்டிவிட்ட அ.தி.மு.க.வினர் இந்த தேர்தலில் இறங்கிவந்து பேசினார்கள். 4
தொகுதிகள் தருவதற்கு உறுதி அளித்திருக்கிறார்கள். இந்த டீல் தே.மு.தி.க.வின் எதிர்காலத்துக்கு
நல்லது என்ற முடிவுக்கு பிரேமலதா வந்து ஓகே செய்திருக்கிறார்.
இதையடுத்து, கூட்டணியை அஃபீஷியலாக அறிவிக்கும் வகையில் அதிமுக
சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முக்கிய
நிர்வாகிகள், சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரேமலதா இல்லத்தில் பேச்ச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
தே.மு.தி.க. சார்பில் பிரேமலதா, எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி ஆகியோர்
இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். 5 தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா சீட் என்று பேரம்
தொடங்கப்பட்டுள்ளதாம். அ.தி.மு.க. சார்பில் 4 தொகுதிகள் உறுதி அளிக்கப்பட்டுள்ளன. எப்படியும்
இந்த வாரத்தில் முடிவு தெரிந்துவிடும் என்கிறார்கள். தேர்தல் செலவுக்கு அ.தி.மு.க.
எவ்வளவு கொடுக்கும் என்பதையடுத்தே பிரேமலதா பேரத்தை முடிவு செய்வார் என்று சொல்லப்படுகிறது.
எப்படியும் தங்களைத் தேடித்தான் பிரேமலதா வருவார் என்று எதிர்பார்த்திருந்த
அண்ணாமலை கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறாராம்.