Share via:
இன்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உள்ள சிறப்பு அம்சங்களை பட்டியலிட்டார்
முதல்வர் மு.க.ஸ்டாலின். அதன் சில சிறப்பம்சங்கள் மட்டும் இங்கே.
உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும். புதுச்சேரிக்கு
மாநிலத் தகுதி வழங்கப்படும். திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும். புதிய கல்விக்
கொள்கை ரத்து செய்யப்படும். குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 ரத்து செய்யப்படும்.
ஒன்றிய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். ஜி.எஸ்.டி சட்டத்தில் சீர்திருத்தம்
கொண்டு வரப்படும்.
இந்தியா முழுவதும்
உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்
தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். மேலும் ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் அரசியலமைப்பு
சட்டத்தின் 361 பிரிவு நீக்கப்படும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.10 லட்சம்
வட்டியில்லா கடன் வழங்கப்படும். ஒன்றிய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.குடியுரிமை
திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும்.
அதோடு 100 நாள் வேலை
150 நாட்களாக உயர்த்தப்படும். நாடு முழுவதும் மாணவர்களின் கடன் ரத்து செய்யப்படும்
என்றும் அவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் சுங்கச்சாவடிகள்
முற்றிலும் அகற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயு
சிலிண்டர் விலை ரூ.500-க்கு வழங்கப்படும் என்றும் பெட்ரோல் விலை ரூ.75-ஆக குறைக்கப்படும்
எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.
மக்களவை தேர்தலில்
திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் இன்று வெளியிட்டார்.
1.
வட சென்னை
– டாக்டர் கலாநிதி வீராசாமி
2. மத்திய சென்னை – தயாநிதி மாறன்
3. தென் சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்
4. காஞ்சிபுரம் – செல்வம்
5 .ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு
6. ஈரோடு – பிரகாஷ்
7. நீலகிரி- ஆ.ராசா
8. திருவண்ணாமலை- அண்ணாதுரை
9. வேலூர்- கதிர்ஆனந்த்
10. தென்காசி – ராணி ஸ்ரீகுமார்
11. தர்மபுரி – ஆ.மணி
12. கள்ளக்குறிச்சி – மலையரசன்
13. பொள்ளாச்சி – கே.ஈஸ்வரசாமி
14 .தூத்துக்குடி- கனிமொழி
15. கோவை – கணபதி ராஜ்குமார்
16. அரக்கோணம் – ஜகத்ரட்சகன்
17. சேலம் – டிஎம். செல்வகணபதி
18. தஞ்சாவூர்- முரசொலி
19. பெரம்பலூர்- அருண் நேரு
20. ஆரணி – எம்.எஸ். துணைவேந்தன்
21. தேனி – தங்கத் தமிழ்ச்செல்வன்