News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

இந்துக்களை பாதுகாக்கும் கட்சி என்றும் கோயிலை அரசிடம் இருந்து மீட்க வேண்டும் என்றும் குரல் கொடுத்துவரும் பா.ஜ.க.வின் மாவட்டத் தலைவர் ஒருவர் ஆதினத்தை பணம் கேட்டு மிரட்டிய விவகாரம் படு சர்ச்சையை ஏற்படுத்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

தருமபுரி ஆதினத்தை பணம் கேட்டு மிரட்டியதோடு, ஆதினத்தின் ஆபாச வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிடுட்டு விடுவேன் என்று மிரட்டி 20 கோடி ரூபாய் பணம் கேட்டு பா.ஜ.க. நிர்வாகி மிரட்டுவதாக ஆதினத்தின் சகோதரர் விருத்தகிரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து பா.ஜ.க. மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் அகோரம் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க. தலைவர் அகோரம், பா.ஜ.க. மாவட்டச் செயலாளர் விக்னேஷ், பா.ஜ.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் வினோத், பா.ஜ.க மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் ஸ்ரீநிவாஸ் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மிரட்டப்பட்ட தருமபுரம் ஆதினத்தை ஜனவரி 23ம் தேதி அன்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது. தேர்தல் வரும் நேரத்தில் இப்படி வசூல் வேட்டையில் மாட்டிக்கொண்டார்களே… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link