Share via:
குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்தில் பிரதமர் மோடியுடன் பங்கேற்ற
கனிமொழியின் பெயரைக்கூட பிரதமர் சொல்லவில்லை என்று தனது வருத்தத்தைப் பதிவு செய்திருந்த
கனிமொழி, மத்திய ஆட்சி மாற்றத்திற்கு தி.மு.க. தேர்தல் அறிக்கை முடிவு கட்டும் என்று
தெரிவித்துள்ளார்.
தி.மு.க மகளிரணி, மகளிர் தொண்டரணி. பிரச்சாரக்குழு. சமூக வலைத்தளக்
குழு, ஆலோசனைக்குழு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, மாநகர மகளிரணி, மகளிர் தொண்டரணி
அமைப்பாளர்கள் ஆகியோ அடங்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னை அடையார் பகுதியில் உள்ள முத்தமிழ்ப்
பேரவை அரங்கத்தில் நடைபெற்றது. திமுக துணைச் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி.
தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.
நாடாளுமன்றத் தேர்தலை
முன்னிட்டு சென்னையில், கழக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு சார்பில் நடைபெற்ற ஆலோசனைக்
கூட்டத்தில் சென்னை மாவட்டத்தைச் சார்ந்த கழகத்தினர் மற்றும் பொதுமக்களிடம் கருத்துகளைக்
கேட்டறிந்தார்.
அதன்பிறகு பேசியவர்,
’பாசிச பாஜக அரசின் திறனற்ற ஆட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள், ஒன்றியத்தில்
ஆட்சி மாற்றத்தை எதிர்நோக்கியுள்ளனர். ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை நோக்கிய
நமது பிரச்சாரத்தை அனைவரிடமும் கொண்டு சேர்ப்போம். பாஜகவின் வீழ்ச்சி தான் இந்தியாவின்
எழுச்சி’ என்று பேசியிருக்கிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், திமுக மகளிரணித் தலைவர் விஜயா தாயன்பன், மாநிலச் மகளிரணி செயலாளர் ஜெ.ஹெலன் டேவிட்சன், மாநிலச் மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ப.இராணி, மகளிரணி இணைச் செயலாளர் குமரி விஜயகுமார், மகளிர் தொண்டரணி இணைச் செயலாளர் தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட, மாநகர அமைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்