Share via:
எடப்பாடி பழனிசாமி கூட்டணியே முடிவாகி வேட்பாளர்களை அறிவித்துவிட்டார்.
ஆனால், பா.ஜ.க. கூட்டணியில் குழப்பமோ குழப்பம் கும்மியடிக்கிறது.
தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாஜகவுடன் ஓ. பன்னீர்செல்வம் நடத்திய
பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. பன்னீர் 3 தொகுதிகளை கேட்ட நிலையில், ஒரே
ஒரு தொகுதி அதுவும் ரவீந்திரநாத்துக்கு மட்டும்தான் தர முடியும் என்று அண்ணாமலை உறுதியாக
நிற்கிறார்.
அதேபோல் ஜி.கே.வாசனுக்கும் ஒரே ஒரு தொகுதி என்பது மட்டுமே உறுதியாகியிருக்கிறது.
அதற்கு மேல் தர முடியாது என்பதைக் கேட்டு ஜி.கே.வாசனும் பதறி நிற்கிறார்.
அ.தி.மு.க.வை கைப்பற்றுவதற்கு பா.ஜ.க. தனக்கு உதவும் என்று நம்பிக்கொண்டு
இருந்தார் பன்னீர். ஆனால், சின்னமும் போச்சு, கட்சியும் போச்சு.
இதனிடையே, பாமகவுக்கு 10 தொகுதி கொடுத்த பா.ஜ.க. தினகரனுக்கு
2 தொகுதிகள் கொடுத்திருக்கிறது. அதே அளவு தொகுதி வாங்குவதற்கு பன்னீரும் வாசனும் முட்டி
மோதிக்கொண்டு இருக்கிறார்கள். கொடுத்ததை வாங்கிக்கிட்டு போங்க என்று ஜி சத்தம் போடும்
வரையில் இப்படித்தான் திரிவாங்க, அதன்பிறகு அமுக்கமாகப் போயிடுவாங்க.
பன்னீருக்கு இந்த அவமானமெல்லாம் சகஜமப்பா…