Share via:
ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளை கொண்டாடியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, ‘ஆட்சியிலும் சரி, அரசியலிலும் சரி, எந்தவிதத்திலும் சமரசம் இல்லாமல், யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாமல், சமநிலையோடு, சமதர்மத்தோடு, சமூக நீதியோடு அரசாண்ட சிங்க நிகர்த் தலைவி நம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். தன்னுடைய வாழ்வு இந்த மக்களுக்கான தவ வாழ்வு. எப்போதும் மக்களிடத்திலே அதை நிரூபிக்கின்ற விதமாக “உங்களால் நான், உங்களுக்காகவே நான்” என்று தொடர்ந்து மக்கள் முன் சூளுரை ஏற்று, அதன்படி மக்கள் பணியாற்றிய ஒப்பற்ற தலைவி நம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். அவர் காட்டிய வெற்றிப் பாதையில் தொடர்ந்து நடைபோட உறுதி ஏற்போம்’ என்று அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் அடுத்த பிரதமர் யார் என்பதை எடப்பாடி பழனிசாமியே தீர்மானிப்பார் என்று அ.தி.மு.க. ஐ.டி. விங்க் கூறியிருப்பதைக் கண்டு கொதித்துப் போயிருக்கிறது பா.ஜ.க.
அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராஜ் சத்யன் தலைமையிலான தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட பொதுச்செயலாளர் பெயரில் 76 விருப்ப மனுக்கள் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பெற்றனர்.
தொடர்ந்து ”#AMMA 76 “புரட்சி தமிழரின் தலைமையில் தேசிய தலைமையை தீர்மானிப்போம்” என்ற விளம்பர பதாகை வெளியிடப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநிலச் செயலாளர் ராஜ் சத்யன் கூறியதாவது: “யார் என்ன சொன்னாலும், அ.தி.மு.க. ஒன்றுதான் வெற்றி பெற முடியும் என்பது தான் கள எதார்த்தம். மாநில உரிமைகள் எதை பற்றியும் தேசிய கட்சிகள் எதுவும் கவலைப்படவில்லை, இங்கு ஆட்சி செய்யும் திமுக அவர்கள் குடும்பத்தின் பற்றி மட்டும் தான் யோசிக்கிறார்கள். மேலும், 40க்கு 40 தொகுதியும் வெற்றி பெற்று தேசிய தலைமையை தீர்மானிக்கும் இடத்தில் இருப்போம்” என்றார்.
இந்த விவகாரத்தைக் கேட்டு பா.ஜ.க. புள்ளிகள் கொதிக்கிறார்கள். எடப்பாடி அளவுக்கு மீறி போகிறார் என்று பிரதமரின் பற்ற வைக்க இருக்கிறார்களாம்