Share via:
தி.மு.க.வுடன் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தல்
உடன்பாடு இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன. இந்த நிலையில் தி.மு.க.வின்
உத்தேசப் பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதையொட்டி தி.மு.க. கூட்டணியில்
கடும் புகைச்சல் எழுந்துள்ளது.
கடந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதில்
9 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் 2024 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு
8 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. அரக்கோணம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை,
நாமக்கல், பொள்ளாச்சி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் இரண்டு தொகுதிகள் குறைக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ்
கட்சி கடும் அதிருப்தியில் உள்ளது. காங்கிரஸ் கட்சியில் கமல்ஹாசனுக்கு இடம் ஒதுக்கவேண்டும்
என்று விடுக்கப்பட்ட கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. ஆனால், கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை
எம்.பி. சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் விடுதலை சிறுத்தைகள் இந்த தேர்தலில் 3 சீட் கேட்டு வந்தனர்.
ஆனால், அவர்களுக்கு வழக்கம்போல் இரண்டு சீட் மட்டுமே திருவள்ளூர், சிதம்பரம் தொகுதி
கொடுக்கப்பட்டுள்ளன.
வைகோ கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஒரு சீட் குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரம்,
ஒரே ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தேசப்பட்டியலை தி.மு.க.வே வெளியிட்டுள்ளது என்றும், இதற்கான
ரியாக்ஷனைப் பார்த்து ஓரிரு தொகுதிகள் கொடுத்து பிரச்னையைத் தீர்க்கும் என்று சொல்லப்படுகிறது.
எப்படியாயினும் நாளைக்குள் உடன்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு என்று சொல்லப்படுகிறது.