Share via:
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் திடீரென நுழைந்து துணை பொதுச்செயலாளராக
பதவி உயர்வு பெற்றிருக்கும் ஆதவ் அர்ஜூனனுக்கு கட்சிக்குள் எதிர்ப்புகள் நிலவி வந்தாலும்,
அவரை எம்.பி. பதவிக்கு நிறுத்துவது உறுதி என்பது போன்று திருமாவின் டெல்லி விசிட் நடந்திருக்கிறது.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின்
நிலைப்பாட்டைக் கடிதமாக எழுதி அதனை முன்னாள் குடியரசுத் தலைவரும், இத்திட்டத்தை ஆய்வுசெய்ய
அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் தலைவருமான ராம்நாத் கோவிந்த் அவர்களை சந்தித்து திருமாவளவன்
வழங்கினார்.
இந்த சந்திப்பின்போது தன்னுடன் ஆதவ் அர்ஜூனனையும் அழைத்துச்சென்றார்.
வழக்கமாக கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரை மட்டுமே அழைத்துச்செல்லும் திருமா
இந்த முறை ஆதவ்வையும் அழைத்துச் சென்றுள்ளார். இது விவாதமாக மாறிவிடக் கூடாது என்பதற்காக
சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜியையும் அழைத்துச் சென்றுள்ளார்.
இதன் மூலம் இந்த முறை ரவிக்குமாருக்கு எம்.பி. சீட் இல்லை என்பதும்
அவரது சீட் ஆதவ்வுக்குப் போகிறது என்பதையும் தெளிவு படுத்தியிருக்கிறார் திருமாவளவன்.
பணம் இருந்தால் எந்த கட்சியிலும் பதவி கிடைக்கும் என்பதை திருமாவும் உறுதி படுத்தியிருக்கிறார்.
ஆக, திருமாவும் பணத்துக்கு அலையும் அரசியல் கட்சிகளின் பட்டியலில் இணைந்துவிட்டார்.

