News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து விருப்பமனு வாங்குவதில் எப்போதும் தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் பெரிய போட்டியே நடக்கும். ஜெயலலிதா இருந்த வரையிலும் தி.மு.க.வை விட அ.தி.மு.க.விலேயே அதிக எண்ணிக்கையில் விருப்பமனு பெறப்படும்.

இந்த நிலையில் வரும் 2024ம் ஆண்டுக்கு விருப்பமனு குறித்த அறிவிப்பை தி.மு.க.வே முதலில் வெளியிட்டது. அதில் பொதுத் தொகுதியில் போடியிட விரும்புபவர்கள் விண்ணப்பக் கட்டணம் 2 ஆயிரமும் டெபாசிட் தொகை 50 ஆயிரம் ரூபாயும் கட்டி மார்ச் 1ம் தேதிக்குள் தருமாறு அறிவித்திருக்கிறது. கடந்த தேர்தலில் 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி விருப்ப மனு பெறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் விருப்பமனு பெறுவதற்கு பொதுத் தொகுதிக்கு 20 ஆயிரம் ரூபாய் என்றும் தனித் தொகுதிக்கு 15 ஆயிரம் ரூபாய் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விருப்பமனு 21ம் தேதி முதல் 1.3.2024 வரை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் ஒரே அளவில் தொகை நிர்ணயிக்கப்படும் நிலை மாறி, பாதிக்கும் குறைவான தொகை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது, கட்சியினரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போட்டியிட விரும்புபவர்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதற்காகவே 50 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக தி.மு.க. கூறிவரும் நிலையில், தி.மு.க.வை விட அதிக எண்ணிக்கையில் விருப்பமனு பெறுவதற்காகவே அ.தி.மு.க.வில் குறைந்த தொகை நிர்ணயிக்கப் பட்டதாம்.

இந்த ரேஸில் ஜெயிக்கப் போவது யார் என்று பார்க்கலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link