News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை பனையூர் தலைமை நிலைய செயலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைவர்கள் மற்றும் அணித் தலைவர்கள் பங்கேற்றார்கள். கலந்துகொண்டனர். கட்சி தொடங்கப்பட்ட பிறகு விஜய் நடத்தும் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் முதலில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள். அந்த உறுதிமொழியில், ’நம் நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த  எண்ணற்ற வீரர்களின் தியாகத்தைப் போற்றுவேன்.

தமிழுக்கும்‌ தமிழைக் காத்தவர்களுக்கும், நாட்டுக்காக போராடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.

இந்திய அரசிலமைப்புச் சட்டத்தின் மீதும் இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து அனைவருடனும் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றை பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதிப் பாதையில் பயணித்து என்றும் மக்கள் நலச் சேவராகக் கடமையாற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன்.

சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவருக்கும் சமவாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையினை கடைப்பிடிப்பேன் என்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

 

விஜய் வருவாரா என்று எல்லோரும் காத்திருக்கிறார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link