Share via:
நடிகர் விஜய் தனது பெற்றோருடன் இணக்கமாக இல்லை என்று பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டிய நிலையில் தற்போது விஜய் தனது பெற்றோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
நடிகர் விஜய் லியோ திரைப்படப் பணிகளில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில் ரீலீசுக்கு தயாராகி வருகிறது. இதற்கிடையில் கட்சிப்பணி என விஜய் பம்பரமாக சுற்றி வருகிறார்.
இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து திரும்பிய நடிகர் விஜய், நேற்று தனது பெற்றோரான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபாவை நேரில் சந்தித்தார். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.
லியோ படத்திற்கு அடுத்தபடியாக இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தி விஜய்68 படத்திற்கான வேலைகள் தொடங்கியுள்ளன. இந்த திரைப்படத்தில் 2 கதாபாத்திரங்களில் விஜய் நடிக்க உள்ளாராம். தந்தை, மகன் என 2 கதாபாத்திரங்ககளில் நடிக்க உள்ள அவர், மகன் கதாபாத்திரத்தில் மிகவும் இளமையாக காட்சியளிக்கும் பணிகளுக்காக கடந்த மாதம் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார்.
சில நாட்களுக்கு முன்னர் இப்பணி முடிவடைந்த நிலையில் சென்னை திரும்பிய விஜய் ஓய்வில் இருந்தார்.
இந்நிலையில் நடிகர் விஜய், அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். எஸ்.ஏ.சந்திரசேகர் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு முன்பு வெளியிட்ட வீடியோ இணையத்தை வைரலாக்கியதை தொடர்ந்து தற்போது இந்த புகைப்படமும் டிரெண்டில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

