Share via:
வரும் 21 மற்றும் 22ம் தேதிகளில் 4 மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
வருகிற 21 மற்றும் 22 ஆகிய இரண்டு நாட்கள் சென்னை மண்டல கள ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இந்த ஆய்வுக் கூட்டத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கப்பட்டு ஆகிய 4 மாவட்டங்களின் கலெக்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இக்கூட்டத்தில் மாவட்டங்கள் வாரியாக எடுக்கப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்தும், மாவட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் கலெக்டர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பகிர்ந்து கொள்ள அரசு உயர் அதிகாரிகளை பள்ளி, கல்வி இயக்குனர் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவுகள் குறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.