Share via:
கடந்த சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்து பரபரப்பை ஏற்படுத்திய
கவர்னர் ஆர்.என்.ரவி இந்த ஆண்டு தமிழக அரசு தயாரித்த உரையை படிக்காமல் புறக்கணிப்பு
செய்திருக்கிறார்.
இன்ற் சரியாக 10 மணிக்கு ஆளுநர் உரை தொடங்கியது. தமிழில் பேசத் தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “தேசிய கீதத்தை கூட்டத்தின் தொடக்கத்திலேயே இசைக்க
வேண்டும். அந்த மரபு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது” என்று இரண்டே நிமிடத்தில் தன்னுடைய
உரையை முடித்துக்கொண்டார். இதையடுத்து, சபாநாயகர் அப்பாவு அந்த உரையை வாசித்தார்.
தமிழக அரசு தயாரித்த உரையை ஆளுநர் முழுமையாக வாசிப்பாரா, புறக்கணிப்பாரா
என முன் கூட்டிய விவாதங்கள் எழுந்த நிலையில் பரவலாக பேசப்பட்டது போலவே ஆளுநர் அரசு
தயாரித்த உரையைப் புறக்கணித்துள்ளார்.
தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நிலவிய பனிப்போர் நிலவி
வருகிறது. கடந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தையும் ஆளுநர் முடித்து வைக்காமல் இருந்தார்.
இந்த காரணங்களால், இந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் பங்கேற்பாரா என்ற சந்தேகம்
இருந்தது. இந்தச் சூழலில், மசோதாக்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கருத்தை ஏற்று,
ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்நிலையில், கடந்த மாதம்
சட்டப்பேரவை கூட்டத்தொடரை முடித்து வைக்க ஆளுநர் அனுமதி அளித்தார்.
இதையடுத்து, இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தில்
ஆளுநர் உரை இடம் பெறுவது உறுதியானது. ஆனாலும் உரையைப் புறக்கணித்து மீண்டும் அதிரடி
அரசியலை தொடங்கி வைத்திருக்கிறார் கவர்னர்.