Share via:
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட,
‘வாடிவாசல்’ படத்துக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு நிலவியது. சூர்யா இந்த படத்துக்காக
நிறையவே ஹோம் ஒர்க் செய்து வந்தார். ஜல்லிக்கட்டு கதை என்பதால் மாடுகளுடன் பழகி, மாடு
பிடிப்பவர்களுடன் கலந்து பேசிவந்தார்.
ஆனால், படப்பிடிப்பு தொடங்கிய தருணத்திலிருந்தே நிறைய பிரச்னைகள்
வந்தன. வெற்றிமாறன் மேக்கிங் ஸ்டைலுக்கும் நடிகர் சூர்யாவுக்கும் ஏனோ சரிப்பட்டு வரவில்லை.
அதனால், சூட்டிங்கில் சின்னச்சின்ன மனஸ்தாபங்கள் நிகழ்ந்தன.
இந்த நேரத்தில் தான் திடீரென இந்த பிராஜெக்ட்டில் அமீரை உள்ளே
கொண்டுவந்தார் வெற்றி மாறன். இதையடுத்து சூர்யா ஒட்டுமொத்தமாக சைலண்ட் ஆகிவிட்டார்.
படிப்பிடிப்பு தொடர்ந்து நடக்குமா அல்லது படம் டிராப் செய்யப்படுமா என்ற கேள்வியே எங்கெங்கும்
உள்ளது.
இந்த நிலையில், நடிகர் தனுஷ் இந்த படத்தில் நடிக்க வேண்டும்
என்பதற்காகவே திட்டமிட்டு சூர்யாவை வெற்றிமாறன் ஏமாற்றிவிட்டதாக ஒரு பேச்சு உலவுகிறது.
நடிகர் தனுஷுக்கும் வெற்றிமாறனுக்கும் உள்ள கெமிஸ்ட்ரி இண்டஸ்ட்ரி அறிந்த ஒன்று. அடுத்தடுத்து
தனுஷ் நடிக்கும் படங்கள் ப்ளாப் அடைந்துவருகின்றன.
ஆகவே, வாடிவாசல் கதையில் நடிப்பதற்கு தனுஷ் ஆசைப்பட்டதாகவும்,
அதற்காகவே திட்டமிட்டு படப்பிடிப்பில் வெற்றிமாறன் பல்வேறு இடையூறுகள் செய்ததாகவும்
சொல்லப்படுகிறது. இந்த விஷயம் அறிந்தே சூர்யா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறாராம்.
அதிகாரபூர்வமாக சூர்யா படத்திலிருந்து வெளியேறியதும் தனுஷ் நடிப்பில்
விறுவிறுவென படப்பிடிப்பு நடக்கும் என்று சவால் விடுகிறார்கள் சினிமா விமர்சகர்கள்.
இது உண்மையா என்பதை வெற்றிமாறனே சொல்ல வேண்டும்.