Share via:
கடந்த சட்டமன்றத் தொடரில் ஆரம்பத்திலேயே எழுந்து ஓடிய ரவி, இந்த
முறை சபாநாயகர் அப்பாவு பேசியதைக் கேட்டு அதிர்ந்து எழுந்து வெளியே பதறி ஓடியிருக்கிறார்.
இன்று சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கிய நேரத்தில், தொடக்கத்திலும்
முடிவிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகக் கூறி
அரசின் உரையை புறக்கணித்தார். இதையடுத்து ஆளுநரின் உரையை அப்பாவு பேசினார். அப்போது,
ஆளுநரை பக்கத்தில் வைத்துக்கொண்டே பல்வேறு விஷயங்களைப் பேசி அதிர வைத்தார்.
தமிழகத்தில் இவ்வளவு பெரிய வெள்ளம், புயல் ஏற்பட்டிருக்கின்றது,
ஆனால், ஒன்றிய அரசு ஒரு பைசா கூட நிதி தரவில்லை பல லட்சம் கோடி ரூபாய் பி.எம். கேர் ஃபண்டில் உள்ளது இந்திய மக்களால் கணக்கு கேட்க முடியாத
அந்த ஃபண்டில் இருந்து 50,000 கோடி ரூபாயை கவர்னர் வாங்கி தரலாமே என்று அழுத்தமாக கோரிக்கை
வைத்தார்.
அடுத்தபடியாக, சாவர்க்கர் வழியில், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு
நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்று கூறியதுமே கவர்னர் எழுந்து நழுவத் தொடங்கினார்.
உடனே, ’ஜன கன மன இனிமேதான் பாடுவாங்க’ என்று கேலி செய்தார்.
மீண்டும் திரும்பிப் பார்க்காமல் ஓடிப் போயிருக்கிறார் கவர்னர்.
தமிழக அரசு உரையை படிக்க விருப்பமில்லை என்றால் ரிசைன் செய்துவிடுங்கள் என்று தி.மு.க.
ஐ.டி. விங் அடித்துவிடுகிறார்கள்.