Share via:
ரஜினிகாந்த் கேமியோ ரோல் என்றாலும் கிட்டத்தட்ட ரஜினி படம் போலவே
லால் சலாம் படத்துக்கு புரமோஷன் செய்யப்பட்டன. எக்கச்சக்க பில்டப் கொடுக்கப்பட்டன.
சங்கி இல்லை, என் அப்பாவுக்கு எல்லா மதமும் ஒன்று தான் என்று இயக்குனரும் ரஜினியும்
மகளுமான ஐஸ்வர்யா முன்கூட்டியே சமாதானக் கொடி வீசியிருந்தார்.
ஆனால், எதுவுமே தியேட்டரில் செல்லுபடியாகவில்லை. ரஜினியின் கேரக்டர்
அதிரடியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறதே தவிர, கதையோட்டத்தில் செட் ஆகவில்லை, யாருடைய
நெஞ்சையும் தொடவில்லை. அதனால் படத்துக்கு கலெக்ஷன் சுத்தமாக குறைந்துவிட்டது என்கிறார்கள்.
முதல் ஒரு நாள் மட்டுமே விறுவிறுப்பான டாக் இருந்தது.
சனி, ஞாயிறுகளில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட
நிலையில், சர்ரென குறைந்து கடைமட்ட வசூலுக்கு வந்துவிட்டது. திங்கள் நிலைமை அதைவிட
மோசம். ரஜினி படம் இப்படியா என்று தியேட்டர்காரர்கள் அதிர்ந்து நிற்கிறார்கள்.
அதேநேரம், அன்றைய தினம் வெளியான மணிகண்டன் நடித்த லவ்வர் படத்துக்கு
நல்ல ரிசல்ட் கிடைத்துவருகிறது. முதல் நாள் மட்டுமே டல்லடித்தது. அடுத்தடுத்த நாட்களில்
வசூல் அதிகரித்து தியேட்டர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் வேலை நடக்கிறது. அதேநேரம், ரஜினியின்
படத்துக்கு ஷோ குறைக்கிறார்கள்.
என்னம்மா, இப்படி பண்ணிட்டீங்களேம்மா