News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பெற்ற பிள்ளையின் மரணத்தை பார்ப்பதே, பெற்றோருக்கு மிகக்கொடிய

துன்பம் தரக்கூடியது என்பார்கள். அத்தகைய பரிதாபத்துக்கு ஆளாகியிருக்கிறார் மனிதநேய

அறக்கட்டளை தலைவரும் முன்னாள் சென்னை மேயருமான சைதை துரைசாமி. இந்த நிலையிலும் தனக்கு

ஆறுதல் சொல்ல வந்தவர்களுக்கு நன்றி கூறி நெகிழ வைத்திருக்கிறார்.


இமாசல பிரதேசத்தில் அவரது மகன் வெற்றி விபத்தில் சிக்கி எட்டு

நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு உடல் கண்டு பிடிக்கப்பட்டது. வெற்றியின் உடலுக்கு

தமிழகத்திலுள்ள அத்தனை முக்கியப் பிரமுகர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

ஆயிரக்கணக்கான பொதுமக்களும், மாணவர்களும் மயானத்தில் திரண்டு நின்றனர்.


தனது மகன் வெற்றிக்கு கொள்ளி வைத்த கையோடு கூடிநின்றவர்களிடம்

பேசினார். அப்போது அவர், எனது மகன் வெற்றி எப்போதும் என் சொற்படி கேட்பவன். அவன் நம்மை விட்டு பிரிந்தது

 விதியின் விபரீதமாக

 நினைக்கிறேன். போகவே வேண்டாம் என்று நான் கூறினேன். அப்படி நான் அழுத்தி சொன்னால் போகாமல் இருப்பவன் வெற்றி. ஆனால், இந்த முறை  அப்படி

செய்யவில்லை. இதுவே எனது கடைசி பயணம் என்று சொல்லிவிட்டு சென்றான்.  ஆனால், உண்மையில் அது அவனுக்கு

 இறுதிப் பயணமாகவே மாறும் என்பதை நான் கனவிலும் நினைக்கவே

இல்லை.


இந்தியா முழுக்க, தமிழகம் முழுக்க ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் ஆகிய உயர் பதவிகளிலும், பிற அரசுப் பதவிகளிலும் பணியாற்றும் வாய்ப்பை பெற்ற எனது மகன்களும், மகள்களும் இங்கு வந்திருக்கிறார்கள். எனது ஒரு மகன் போனாலும் (பேச முடியாமல் குரல் கம்பி அழுகிறார்) எனக்கு நூற்றுக்கணக்கான மகன்கள் இருக்கிறார்கள். மகள்கள் இருக்கிறார்கள் என்ற மனவலிமையோடு நான் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


சக மனிதனுக்காக வாழ வேண்டும்; சமூக நீதி என்பது பொருளாதாரத்தால் தடைபட்டு போய்விடக் கூடாது என்பதற்காக அரசால் அங்கீகரிக்கப்பட்ட 259 ஜாதிகளில் 170 ஜாதிகளை சேர்ந்த இளைஞர்களை அரசுப் பணியில் அமர்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்

கொடுத்திருக்கிறேன். மீதமுள்ள 89 ஜாதிகளில் உள்ளவர்களை எல்லாம் அரசுப் பதவியில் அமர வைக்க வேண்டும் என்பது தான் எனது லட்சியம் என்பதை என் மகனின் மரணத்தில் நான் உறுதி

எடுத்துக் கொள்கிறேன்.


இனி என் வாழ்நாள் முழுவதும் அதை நோக்கி பயணிப்பேன். சக மனிதனுக்காக வாழ்ந்து எனது மகனின் ஆன்மாவை சாந்தியடைய வைப்பேன். எனது சேவையை தொடர்ந்து செய்வேன். இந்த சோக நிகழ்வில் பல இடையூறுகளுக்கு மத்தியில் வந்து எனக்கு ஆறுதல் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’

என்று  சைதை துரைசாமி கூறினார்.


தன்னுடைய சோகத்துக்கு மத்தியிலும் ஆறுதல் சொல்லவந்த மக்களுக்கு

ஆறுதல் சொல்வது தான் சைதை துரைசாமியின் மனிதநேயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link