News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மோடி என்றால் திருடர் என்று பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி வைத்த விவகாரம் ஜாதி விவகாரமாக மாற்றப்பட்டு, அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. அதனை நீதிமன்றத்துக்குச் சென்று மீட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பட்டியலின அமைச்சரை அவமானப்படுத்திய டி.ஆர்.பாலுவின் எம்.பி. பதவியை பறிக்க வேண்டும் என்று பா.ஜக.வினர் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் தமிழக வெள்ளப் பாதிப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று பேசிய டி.ஆர்.பாலு, ‘மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டுச் சென்றார். மேலும், உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து நாங்களும் கோரிக்கை வைத்திருக்கிறோம். ஆனால், இன்னும் கூடுதல் நிதி ஒதுக்கவில்லை“ என்று குற்றம் சாட்டினார்.

அப்போது குறுக்கிட்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “நீங்கள் தேவையில்லாததைப் பேசுகிறீர்கள்” என குற்றம்சாட்டினார். உடனே கோபமான டி.ஆர்.பாலும், ‘’இது உங்களுக்கு சம்பந்தம் இல்லாத கேள்வி. அதனால், நீங்கள் உட்காருங்கள். நீங்கள் அமைச்சராக இருப்பதற்கே தகுதியில்லை. மக்களவை உறுப்பினராக இருப்பதற்கும் தகுதியில்லாதவர்” என்றார்,

இதையடுத்து, பட்டியலின அமைச்சரை டி.ஆர்.பாலு அவமரியாதை செய்துவிட்டதாக பா.ஜ.க.வினர் கொதித்தனர். இதையடுத்து, ‘திமுக தகுதியற்ற கட்சி’, ’காங்கிரஸ் தகுதியற்ற கட்சி’ என கோஷமிட்டதையடுத்து தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

எல்.முருகனுக்கு ஆதரவாக தமிழக பா.ஜ.க.வை சேர்ந்த அத்தனை தலைவர்களும் களம் இறங்கி டி.ஆர்.பாலு மீது கடுமையாக குற்றம் சாட்டி வருகிறார்கள். டி.ஆர்.பாலு திமிர் பிடித்தவர் என்று கூறியிருக்கிறார் அண்ணாமலை.

நடந்த சம்பவம் குறித்து டி.ஆர்.பாலு, ”தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிதியிலிருந்து நிவாரண நிதி குறித்து பேசியபோது, அந்தத் துறைக்குச் சம்பந்தமே இல்லாத எல்.முருகன் மாநில பேரிடர் நிவாரணம் நிதி குறித்து பேசினார். நாங்கள் கேட்பது வேறு. அவர் கூறுவது வேறு. அவர் தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்கிறார். அதனால்தான் அவரை அன்ஃபிட் (UNFIT) என்று கூறினேன். உடனே தலித் அமைச்சரை அன்ஃபிட் என்று கூறியதாக அதை திருத்து பேசுகிறார்கள்…’’ என்றார்.

இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ’’சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பட்டியலின மக்களின் வாக்குகளுக்காக மட்டுமே அரசியல் செய்பவர்கள் திமுக-வைச் சேர்ந்த இந்த போலி திராவிட மாடல் சமூகநீதிக்காரர்கள். சமூக நீதிக்கும் இவர்களுக்கும் இருக்கும் தூரத்தை இன்று காட்டியுள்ளார்கள். போலி திராவிட மாடல் சமூகநீதி பிம்பத்தை முகத்தில் மாட்டிக் கொண்டு திரியும் உங்களின் (திமுக) முகமூடியை, வருகின்ற தேர்தலில் மக்கள் கிழித்தெறிவார்கள்…” என கூறியுள்ளார்.

தற்போது பா.ஜ.க. குறித்து டி.ஆர்.பாலு கடுமையாக விமர்சனங்களை முன்வைப்பதால், அவரது நாடாளுமன்றப் பேச்சு மூலம் நடவடிக்கை எடுத்து எம்.பி. பதவி பறிக்கப்படுவதற்கு வாய்ப்பு உண்டு என்கிறார்கள். பார்க்கலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link