News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

குங்குமப் பொட்டு வைத்துக்கொண்டு, தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் விஜய் அறிவித்திருக்கும் கட்சிக்குப் பின்னே அமித் ஷாவின் தேர்தல் கணக்கு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திய எந்த ஒரு விஷயம் குறித்தும் இதுவரை நடிகர் விஜய் கருத்து கூறியது இல்லை, ஒரே ஒரு மக்கள் போராட்டத்தில் கூடகலந்துகொண்டது இல்லை. ஒரே ஒரு பிரஸ் மீட் வைத்து செய்தியாளர்களை சந்தித்தது இல்லை.

இந்த நிலையில், ஒரு புதிய படத்தின் அறிவிப்பு போன்று தமிழக வெற்றிக் கழக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதேநேரம், மிகவும் ஜாக்கிரதையாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் தன்னுடைய இலக்கு தி.மு.க. அரசை மாற்றுவது என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அரசியல் களத்தில் இறக்கி திராவிட அரசியலுக்கு முடிவு கட்ட பா.ஜ.க பிளான் போட்டது. கொரோனாவை காரணம் காட்டி தப்பித்துவிட்டார் ரஜினி. ஆகவே, இப்போது அண்ணாமலை, சீமான் போன்றவர்களை களத்தில் இறக்கி தினம் ஒரு பிரச்னைகளைக் கிளப்பி வருகிறார்கள். ஆனால், இது போதாது என்பதாலே விஜய் பக்கம் பார்வையை பதித்திருக்கிறார்கள்.

இப்போது நடிகர் விஜய்க்கு தமிழகம் முழுக்க ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள். இவர்களைப் பயன்படுத்தி திராவிட வாக்குகளை பிரிப்பதற்காக பா.ஜ.க. கொடுத்துள்ள அசைன்மெண்ட்டை விஜய் ஏற்றுக்கொண்டுள்ளார் என்றே சொல்கிறார்கள்.

இதன்படி, 2025 மே மாதம் தொடங்கி 2026 தேர்தல் வரையிலும் ஒரு வருடம் அரசியல் தலைவராக விஜய் செயல்பட வேண்டும் என்று கட்டளையிடப்பட்டு, தேர்தலுக்குச் செலவாகும் 1000 கோடி ரூபாயை களத்தில் இறக்குவதற்கு பா.ஜ.க. உறுதி அளித்திருப்பதாக தகவல்கள் கசிகின்றன.

அதனால்தான், தனக்கென்று லட்சியம், கொள்கை என்று எதுவுமில்லாத விஜய் தைரியமாக அரசியல் அறிவிப்பை வெளியிட்டு, எளிதில் முதல்வராகிவிடலாம் என்று கணக்கு போட்டு களத்திற்கு வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

அரசியல் எடுபடவில்லை என்றால் மீண்டும் முழுமையாக சினிமாவுக்குத் திரும்பிவிடுவாராம். ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ஓட்டுகள் வாங்கி தி.மு.க.வின் வெற்றியைத் தடுக்க வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோள் என்கிறார்கள்.

விஜய்காந்த், பாக்கியராஜ், டி.ராஜேந்தர், சீமான், மன்சூரலிகான் வரிசையில் அடுத்தவொரு நடிகர் நாடாள வருகிறார். இனி, பணம் பாதாளம் வரை பாயும்.  வேடிக்கை பார்க்கலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link