Share via:
சினிமாவில் நடித்தால் மட்டும் போதும், அரசாங்கத்தை எதிர்த்து
வீர வசனம் பேசினால் போதும், சிலருக்கு திருமண மண்டபத்தில் வைத்து நலத்திட்ட உதவிகள்
கொடுத்தால் போதும் தமிழகத்துக்கு முதல்வர் ஆகிவிடலாம் என்று கணக்கு போட்டு தமிழக வெற்றிக்
கழகத்தைத் தொடங்கியிருக்கிறார் நடிகர் விஜய்.
நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் நிறைய அரசியல் தலைவர்கள்
கருத்து சொல்லிவருகிறார்கள். 2026 தேர்தலில் நான் முதல்வர் ஆகவேண்டும் என்று சொல்லியிருக்கிறேன்,
இப்போது விஜய் குறுக்கே வந்து இடைஞ்சல் செய்கிறார் என்று சரத்குமார் கோபம் காட்டி வருகிறார்.
எது எப்படியோ, விஜய் அரசியலுக்கு வந்துவிட்டதில் அவரது ரசிகர்களுக்கு
எக்கச்சக்க சந்தோஷம். விஜய் மட்டும் வந்தால் போதுமா, சினிமாவில் மாதிரி ஒரு கதாநாயகியும்
விஜய்யுடன் தேர்தல் களத்தில் நிற்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள்.
அதனால், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளராக நடிகை த்ரிஷாவைக்
கொண்டுவர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். இன்னும் சிலர் கீர்த்தி
சுரேஷிற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
கமல்ஹாசன் அரசியலுக்கு வந்த நேரத்தில் அவருக்காக குஷ்பு, சிம்ரன்
ஆகியோரெல்லாம் களம் இறங்குவார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால், அவரது மனைவியாக இருந்த
கெளதமி கூட வரவில்லை. கடைசியில் ஸ்ரீபிரியாவும் கோவை சரளாவும்தான் வந்து சேர்ந்தார்கள்.
இப்போது விஜய்க்கு வரப்போவது த்ரிஷாவா… கீர்த்தி சுரேஷா…?
இதுக்கும் சேனல்ல ஒரு விவாதம் வையுங்கப்பா..