Share via:
’விஜயகாந்த் மறைந்து விண்ணுக்கு சென்றாலும், அவரை எப்போதும்
பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்’ என்று தன்னுடைய கையில் கேப்டன் விஜயகாந்த்தின்
உருவத்தை டாட்டூவாக வரைந்திருக்கிறார் பிரேமலதா.
மகிழ்ச்சியுடன் விஜயகாந்த் படத்தை பச்சை குத்திக்கொள்ளும் பிரேமலதாவின்
வீடியோ இப்போது வைரலாக வலம் வருகிறது. இப்போது தினமும் விஜயகாந்த் சமாதிக்கு மக்கள்
வந்துபோகிறார்கள். பிரதமர் மோடி தொடங்கி லோக்கல் அண்ணாமலை வரையிலும் விஜயகாந்த் புகழ்
பாடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆகவே, இந்த செல்வாக்கையும், அனுதாப ஓட்டுகளையும் இந்த
நாடாளுமன்றத் தேர்தலில் அறுவடை செய்துவிட பிளான் போடுகிறார் பிரேமலதா.
பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வினர் கடந்த தேர்தலில் மதிப்பு
இல்லை. கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிட்டார்கள். அதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில்
பா.ஜ.க. கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக தாங்களே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்
பிரேமலதா. பாட்டாளி மக்கள் கட்சி ஒரு வேளை பா.ஜ.க. கூட்டணியில் நுழைந்துவிட்டால், இவர்
அ.தி.மு.க.வுக்கு தாவுவதற்கு தயாராக இருக்கிறார்.
இப்போது மக்கள் செல்வாக்கு, அனுதாபம் ஆகியவை தங்கள் கட்சிக்கு
இருப்பதால் இந்த தேர்தலில் பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.வில் அதிக மதிப்பு இருக்கும்
என்று நம்புகிறார். அதனாலே வரும் 7ம் தேதி தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு
பொதுச்செயலாளராக பிரேமலதா அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு அதிரடி அரசியலில் பிரேமலதா, சுதீஷ்,
விஜயபிரபாகரன் ஆகியோர் களம் இறங்குவார்களாம். 10 மக்களவைத் தொகுதிகள் லட்சியம் 7 நிச்சயமாம்.
அதோடு ஒரு ராஜ்யசபா சீட் வேண்டும் என்பதுடன் செலவுக்கு பணம் தர வேண்டும் என்பதும் கட்டாயமாம்.
பிரேமலதா ஆட்டம் சூடு பிடிக்கிறது,