Share via:
நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் பலத்தைக் காட்டுவதற்கும் விஜயகாந்த்
மறைவு அனுதாப ஓட்டுகளை வாங்கவும் தே.மு.தி.க. தீவிரம் காட்டி வருகிறது. கூட்டணிப் பேச்சுகள்
விறுவிறுப்படைந்திருக்கும் நிலையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
தலைமையில் இன்று மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கேப்டன் மறைவுக்கு வருத்தம் தெரிவித்தும், அஞ்சலிக்கு திரண்டுவந்த அரசியல் மற்றும்
சினிமா கலைஞர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் விஜயகாந்துக்கு பத்மபூஷன்
விருது அறிவித்த மோடிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேப்டன் சமாதியை கேப்டன் கோவிலாக மாற்றி தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்க
வேண்டும் என்றும் கேப்டன் சன்னதியில் தினமும் அன்னதானம் மற்றும் உதவிகள் செய்துவரும்
வள்லல் விஜயகாந்த் நினைவு அன்னதான அறக்கட்டளையில் மற்றவர்களும் இணைந்துகொள்ள வேண்டும்
என்று கோரப்பட்டுள்ளது.
கேப்டனுக்கு மாவட்டம் தோரும் சிலை அமைக்க வேண்டும் என்றும் கொடிநாளான
12 பிப்ரவரி என்று அனைத்து கிராமங்களிலும் நகரங்களிலும் புரட்சி தீபக்கொடி ஏற்றவும்,
உறுப்பினர் சேர்க்கை நடத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றக் கூட்டணி பேச குழு அமைக்கவும், கூட்டணி இறுதி முடிவெடுக்கவும்
கழக பொதுச்செயலாளர் திருமதி அண்ணியாருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளது.