Share via:
2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் வீட்டில்
ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியிருக்கும்
விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்திவருகிறது.
சமீபத்தில் அண்ணாமலை பேசியபோது, ‘இதுவரை யார் குடும்பத்துக்கு
அரசு வேலை கிடைக்கவில்லையோ, அவர்களுக்கு எல்லாம் வீட்டைத் தட்டி அரசு வேலை கொடுக்கப்படும்.
இது அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய உரிமை. அவர்களுக்கு நிச்சயம் வழங்கப்படும்’ என்று
கூறியிருக்கிறார்.
இந்த விவகாரம் தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.
சீமான் போலவே நடைமுறைக்கு சாத்தியமில்லாத விவகாரத்தை அண்ணாமலை பேசியிருப்பதாகச் சொல்கிறார்கள்.
ஏனென்றால் இப்போது தமிழகத்தில் கிட்டத்தட்ட 8 கோடிக்கும் மேல்
மக்கள் இருக்கிறார்கள் என்றால், குடும்பத்துக்கு 4 பேர் என்று வைத்துக்கொண்டாலும் கிட்டத்தட்ட
2 கோடி குடும்பங்கள் உள்ளன. இப்போது அரசுத் துறையில் அதிகபட்சமாக 20 லட்சம் வேலைகள்
மட்டுமே உள்ளன. இத்தனை குடும்பத்துக்கும் எப்படி வேலை கொடுக்க முடியும்..?
அரசு வேலையின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படுமா.. அவர்களுக்கு
சம்பளம் எப்படி கொடுக்க முடியும்… இது எப்படி சாத்தியமாகும் என்று பேசாமல் சீமான் மாதிரி
பேசினால் எப்படி என்று பா.ஜ.க.வினரே அண்ணாமலையை கிண்டல் செய்கிறார்கள்.
2026ல் ஆட்சிக்கு வந்தால்தானே செய்ய வேண்டும், அதற்கு வாய்ப்பு
இல்லை என்பதால் தைரியமாகச் சொல்கிறார் என்று மீம்ஸ் போடுகிறார்கள் தி.மு.க. ஐ.டி. விங்
ஆட்கள்.