Share via:
நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து தி.மு.க.வில்
பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது. அதேநேரம், எதிர்க்கட்சியாக இருக்கும்
அ.தி.மு.க.வில் இன்னமும் அதற்கான எந்த அசைவும் தென்படவில்லை. எப்படியாவது பா.ம.க.வை
மட்டும் உடன் வைத்துக்கொண்டு வாக்குகளை அள்ளிக் காட்டிவிட வேண்டும் என்பதுதான் எடப்பாடி
பழனிசாமியின் ஆசை.
ஆனால், பா.ம.க. போடும் பிளானே வேறு. இந்த தேர்தலில் அவர்களுக்கு
தி.மு.க.வில் அழைப்பு இல்லை என்றாலும் அ.தி.மு.க.விலும் பா.ஜ.க.விலும் அழைப்பு இருக்கிறது.
அடுத்த தேர்தலிலும் மோடியே வெற்றிபெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது
என்ற நிலை நிலவுவதால் அவர்களுடைய முதல் விருப்பம் பா.ஜ.க.வாக இருக்கிறது. அதேநேரம்,
பா.ஜ.க.விடம் பணம் பேரம் பேச முடியாது. ஆகவே, அ.தி.மு.க.விடம் அதிகம் கேட்கலாம். கொடுத்தால்
வாங்கிக்கொண்டு நிற்கலாம் அல்லது பா.ஜ.க.வுக்கு தாவலாம் என்று நினைக்கிறார்கள்.
ஆகவே, முதல் கட்டமாக நடந்த பேச்சுவார்த்தையில் பா.ம.க. தன்னுடைய
கோரிக்கையை தெள்ளத்தெளிவாக விளக்கியிருக்கிறதாம். அதாவது வட மாவட்டங்களில் 7 தொகுதிகளும்
வட மற்றும் தென் மாவட்டங்களில் தலா 2 தொகுதிகள்
என 11 தொகுதி வேண்டும்.
தேர்தல் செலவை கவனித்துக்கொள்வதுடன் 750 கோடி ரூபாயும் தர வேண்டும்.
அதோடு, அன்புமணியை மீண்டும் எம்.பி.யாக்குவதற்கு உறுதிமொழி தர வேண்டும் என்பது வெளிப்படையான
கோரிக்கையாக இருக்குமாம். மேலும், 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் கூட்டணியில் அன்புமணியை
துணை முதல்வர் பதவி வேட்பாளர் என்று அறிவிக்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளதாம்.
இப்படி கேட்டால் 10 தொகுதிகளும் 500 கோடி ரூபாயும் கிடைக்கும்
என்று ராமதாஸ் எதிர்பார்க்கிறாராம். ஆனால், ராமதாஸ் எதிர்பார்ப்பை அறிந்து எடப்பாடி
பழனிசாமி அதிர்ந்து நிற்கிறாராம். எல்லா பணத்தையும் அவங்ககிட்டே குடுத்துட்டு நாம என்ன
செய்றது, இவங்களுக்குக் கொடுக்கிறதுக்குப் பதிலா மக்களிடம் கொடுத்து ஓட்டு வாங்கலாம்
என்ற எண்ணத்தில் பேச்சுவார்த்தையை தள்ளிப்போட்டு விட்டாராம்.
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா…