Share via:
தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள்
வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாடுகளில் இருந்து சட்டத்துக்குப் புறம்பான தீவிரவாத
இயக்கங்களிடமிருந்து நிதிபெற்றது தொடர்பாக சோதனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் திருச்சி சண்முகா நகரில் உள்ள நாதக நிர்வாகி சாட்டை
துரைமுருகன் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் கைப்பற்றி
இருப்பதாகத் தெரிகிறது.
அதேபோல் சென்னையில் நாம் தமிழர் அலுவலகத்தில் ஆஜராகுமாறு இடும்பாவனம்
கார்த்திக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதுதவிர சிவகங்கை இளையான்குடியில் நாம் தமிழர் கட்சியைச்
சேர்ந்த விஷ்ணு, ராஜபாளையத்தைச் சேர்ந்த இசை
மதிவாணன், தென்னகம் விஷ்ணு போன்றோர் வீடுகளிலும் சோதனை நடக்கிறது.
லண்டனில் உள்ள விடுதலை புலிகள் முக்கிய இயக்கத்தின் நிர்வாகிகள்
சிலருடன் நாம் தமிழர் இயக்கத்தினர் தொடர்பில் இருப்பதாகவும், யூடியூப் பார்த்து துப்பாக்கி
தயாரித்த வழக்கு விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சோதனை நடப்பதாகக் கூறப்படுகிறது.
இதுவரை, இந்த சோதனை குறித்து சீமான் இதுவரையிலும் கருத்து எதுவும்
தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது பா.ஜ.க.வும் சீமானும் நடத்தும் கண்ணாமூச்சு
நாடகம் என்று தி.மு.க.வினர் சிரிக்கிறார்கள். தமிழகத்தில் பட்ஜெட் தொடர்பாக நடக்கும்
காமெடி கலாட்டாவை திசை திருப்புவதாகச் சொல்கிறார்கள்.
அதேநேரம் தமிழக பா.ஜக. தலைவர் அண்ணாமலைக்கும் சீமானுக்கும் இடையில்
நடக்கும் மோதல் காரணமாகவே இந்த சோதனை என்று சீமானின் ஆதரவாளர்கள் கோபமாகிறார்கள். ஆனால்,
சீமான் வீட்டில் மட்டும் ஏன் சோதனை இல்லை என்பதை ஆச்சர்யமாக தம்பிகளே பார்க்கிறார்கள்.