Share via:
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்
பேரில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான குழுவினர் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்துபவர்களையும்,
விற்பனை செய்பவர்களையும் விரட்டிப் பிடித்து கைதுசெய்து வருகிறார்கள்.
மடிப்பாக்கம் எஸ்.7 காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு
கிடைத்த ரகசிய தகவல்கள் அடிப்படையில் மடிப்பாக்கம் கைவேலி சந்திப்பில் வாகன தணிக்கை
தீவிரப்படுத்தப்பட்டது.
அப்போது காரில் கஞ்சா கடத்திவந்த ரஞ்சன் கிஷோர் குமார், ஒத்தக்கண்
அசோக், உதயகுமார் ஆகிய 3 பேரை கைது செய்து 303 கிலோ எடைகொண்ட கஞ்சா, அரிவாள், செல்போன்கள்,
கார்கள் கைப்பற்றப்பட்டன. இவர்களில் ரஞ்சன் என்பவர் மடிப்பாக்கம் செல்வம் கொலை வழக்கில்
தொடர்புடைய தலைமறைவுக் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. ஒத்தக்கண் அசோக் மீது
16 குற்ற வழக்குகளும் உதயகுமார் மீது 13 வழக்குகளும் உள்ளன.
இத்தகைய அபாயகரமான கிரிமினல்களை கைது செய்த புனித தோமையர் மலை
காவல் மாவட்ட தனிப்படை காவல் குழுவினர் மற்றும் மடிப்பாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையிலான
காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் காவல் உயரதிகாரிகள் பாராட்டினார்கள்.