Share via:
நாம் தமிழர் கட்சியை பா.ஜ.க.வின் பி டீம் என்று தி.மு.க.வினர்
அவ்வப்போது கடுமையாக விமர்சனம் வைக்கிறார்கள். அதாவது பா.ஜ.க.விற்கு எதிரான வாக்குகளைப்
பிரிப்பதற்கு நாடகம் போடுவதாக தி.மு.க.வினர் கூறிவருகிறார்கள்.
இதற்கு பதிலடியாக நாம் தமிழர் கட்சியினர், தி.மு.க.வை பா.ஜ.க.வின்
பி.டீம் என்று பொதுக்கூட்டங்களில் சகட்டுமேனிக்குத் திட்டுகிறார்கள்.
இந்த நிலையில், மத்திய பா.ஜ.க. அரசை சாட்டை துரைமுருகன் ஏறுக்குமாறாக
பேசி வம்பிழுக்கிறார் என்பது தொடங்கி பல்வேறு விவகாரங்களில் நாம் தமிழர் சீமானுக்கும்
சாட்டை துரைமுருகனுக்கும் கருத்துவேறுபாடு நிகழ்வதாக சொல்லப்பட்டு வந்தது.
அதன் உச்சகட்டமாக துரைமுருகனை அடக்கி வைப்பதற்காக சாட்டை துரைமுருகன்
மீது விசாரணை நடத்தவேண்டும் என்று சீமானே என்.ஐ.ஏ. அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்ததாக
நாம் தமிழர் நிர்வாகிகள் சிலர் சொல்கிறார்கள்.
அதன் அடிப்படையில் சாட்டை துரைமுருகனை மிரட்டி வைப்பதற்காக ஒரு கண் துடைப்பு ரெய்டு
நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு என்ற விவகாரத்திற்காக ரெய்டு என்றால்,
அதை முதலில் சீமானிடம் இருந்தே என்.ஐ.ஏ. தொடங்கியிருக்க வேண்டும். ஏனென்றால் அவர் பல்வேறு
கூட்டங்களில் வெளிப்படையாக ராஜீவ் காந்தியை விடுதலைப்புலிகள் கொலை செய்தனர் என்றும்
பிரபாகரனுடன் நெருங்கிப் பழகியுள்ளேன் என்றும் கூறியிருக்கிறார்.
ஆனால், என்.ஐ.ஏ. சம்பந்தமே இல்லாமல் சாட்டை துரைமுருகனை நோக்கியும்,
மிகச்சாதாரண ஒரு சிலரையும் ரெய்டு என்ற பெயரில் தொட்டு திரும்பியிருப்பதைப் பார்த்தால்,
இதுதான் உண்மையோ என்று தோன்றுகிறது. இதன் மூலம் சாட்டை துரைமுருகன் வாயை அடைக்கும்
வேலை சிறப்பாக செய்துமுடிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
என்னமோ நடக்குது… மர்மமா இருக்குது..!