Share via:
இன்று தமிழகத்தில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக தமிழக உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, காத்திருப்போர் பட்டியலில் இருந்த சீனிவாச பெருமாள் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., ஆகவும் திருப்பூர் மாவட்ட எஸ்.பி., ஆக அபிஷேக் குப்தாவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும்…. தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி., – பகோர்லா செபாஸ் கல்யாண், சிஐடி பாதுகாப்பு பிரிவு எஸ்.பி., – சக்திவேல், சென்னை கொளத்தூர் துணை கமிஷனர் – பாண்டியராஜன், தெற்கு சரக லஞ்ச மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு எஸ்.பி., – சாமிநாதன், உளவுப்பிரிவுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் தடை செய்யப்பட்ட குற்றங்கள் பிரிவு எஸ்.பி., -ஷியாமளா தேவி, வடக்கு சரக லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு எஸ்.பி., – சரவணகுமார், கோவை வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் – ரோஹித் நாதன் ராஜகோபால், திருப்பூர் வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் – ராஜராஜன், நெல்லை தலைமையிடத்து துணை கமிஷனர் – அனிதா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.