Share via:
உதயநிதிக்கு கெத்து காட்ட வேண்டும் என்பதற்காக தி.மு.க. மாவட்டச்
செயலாளர்களுக்கு திடீரென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதை எதிர்பார்க்காத மா.செ.க்கள்
அதிர்ந்து நிற்கிறார்கள்.
திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில்
ஞாயிறு நடைபெறஉள்ளது. இந்த மாநாட்டில் பெரும் கூட்டத்தைக் காட்ட வேண்டும் என்பதற்கு
இளைஞர் அணியினர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மாவட்டச் செயலாளர்களும்
இளைஞர் அணியினருக்கு ஆதரவாக செலவுக்குப் பணம் கொடுப்பதுடன் ஆட்களுக்கும் ஏற்பாடு செய்ய
வேண்டும் என்று மேலிடத்தில் இருந்து அன்புக் கட்டளை விடுக்கப்பட்டுள்ளது. திடீரென இப்படி
சொன்னால் என்ன செய்வது என்று தெரியாமல் மா.செ.க்கள் தடுமாறி வருகிறார்கள்.
இந்த விழாவில் பங்கேற்பதற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று
சேலம் வருகிறார். சென்னையில் இருந்து கொண்டுவரப்படும் சுடரொளியைப் பெற்று, அதைமாநாட்டுத்
திடலில் ஏற்றிவைக்கிறார். இதையடுத்து முரசொலி புத்தக சாலை கண்காட்சியைத் திறந்து வைக்கிறார்.
‘நீட்’ தேர்வு விலக்கு கோரி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள 1,500 பேர் கொண்ட
இருசக்கர வாகனப் பேரணி, திமுக தலைவர் ஸ்டாலின் பின்னால் அணிவகுத்து, மாநாட்டுத் திடலுக்குச்
செல்கிறது. தொடர்ந்து, 1,000 ட்ரோன்களைக் கொண்டு `ட்ரோன் ஷோ’ நடத்தப்படுகிறது.
நாளை திமுக மாநில மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி., மாநாட்டுத்
திடலில் உள்ள கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றிவைக்கிறார். மாநாட்டுப் பந்தலை மாணவரணிச்
செயலாளர் எழிலரசன் திறந்து வைக்கிறார். காலை 10 மணியளவில் முதல்வர் ஸ்டாலின், மாநாட்டைத்
தொடங்கி வைக்கிறார்.
பின்னர், தீர்மானங்கள் வாசிப்பு, மொழிப் போர் தியாகிகளின் படத்திறப்பு,
திமுக முன்னணித் தலைவர்கள் உரை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மாலையில் முதல்வர்
ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். மாநாட்டுப் பந்தலில் 1.25 லட்சம் பேர் அமரும் வகையில்
இருக்கைகள் போடப்படுகின்றன. மொத்தம் 5 லட்சம் பேர் பங்கேற்பர். அனைவருக்கும் மதியம்
அசைவ உணவு வழங்கப்படுகிறது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து மாநாட்டுக்கு வரும் வாகனங்கள்
ஜிபிஎஸ் மூலம் மாநாட்டை அடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை இல்லாத
அளவுக்குபிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரும்மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடு
தொடக்கமாக இந்த மாநாடு அமைய வேண்டும் என்பதற்காகவே தடபுடல் ஏற்பாடுகள் நடக்கின்றன.
துணை முதல்வர் பதவி வாங்குறதுன்னா சும்மாவா..?