Share via:
கடந்த முறை மக்களவை தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு ஒரு சீட் கொடுக்கப்பட்டது.
அதோடு மாநிலங்களவையும் வைகோவுக்கு ஒரு சீட் வழங்கப்பட்டது. அந்த சீட் தற்போது முடிவுக்கு
வருகிறது.
இந்த நிலையில் மீண்டும் வைகோவை மாநிலங்களவைக்கு அனுப்பப்போவதில்லை
என்பதை தி.மு.க. உறுதி செய்துவிட்டதாம். கடந்த முறை போன்று மக்களவைக்கு மட்டும் ஒரே
ஒரு தொகுதி கொடுக்கப்படும் என்று தெரிகிறது. மாநிலங்களவை சீட் கிடைக்கவில்லை என்றால்
தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து நீடிக்குமா என்பது கேள்விக்குரியாகியுள்ளது.
இந்த நிலையில் சுதந்திர போராட்ட வீரர் டி.ஆர். இராமாமிர்த தொண்டைமான்
சிலை திறப்பு விழா நிகழ்ச்சி தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், திருப்பனந்தாள் ஒன்றியம்,
தத்துவாஞ்சேரியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு இராமாமிர்த தொண்டைமான்
சிறப்பை பற்றி துரை வைகோ உரையாற்றினேன்.
சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய காலத்தில் ஏழை எளிய மக்களுக்காகவும்,
விவசாயிகளுக்காகவும் தொடர்ந்து குரல்கொடுத்து மக்களின் பேரன்பை பெற்றவராக வாழ்ந்திருக்கிறார்.
இளம் வயதிலேயே போராட்ட வாழ்வை தொடங்கி இறுதிவரைக்கும் மக்களுக்காகவே போராடி தஞ்சை தரணிக்கு
பெருமை சேர்த்தவர் என்று கூறினார்.
முன்னதாக மாநிலங்களவை
எம்.பி. சீட் குறித்து துரை வைகோவிடம் கேட்கப்பட்ட நேரத்தில், வைகோ மக்களவை தேர்தலில்
போட்டியிட மாட்டார் என்பதை மட்டும் கூறினார்.
அப்படியென்றால்,
ஒரு சீட் போதும் என்ற எண்ணத்தில் ம.தி.மு.க. இருக்குமா அல்லது கூட்டணியில் குடைச்சல்
கொடுக்குமா என்று இனிமேல் தெரியவரும்.