Share via:
வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தி.மு.க. தயாராகும் வகையில்
பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு இன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த குழுவில்
கனிமொழி, உதயநிதியுடன் மேயர் பிரியாவும் சேர்க்கப்பட்டுள்ளது அரசியல் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
தேர்தல் அறிக்கை வெளியிடுவதற்கான குழுவில் கனிமொழி கருணாநிதி,
டி.கே.எஸ்.இளங்கோவன், ஏகேஎஸ்.விஜயன், பிடிஆர். பழனிவேல் தியாகராஜன், டிஆர்பி ராஜா,
கோவி செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், சிவிஎம்பி. எழிலரசன், அப்துல்லா, எழிலன் நாகநாதன்
ஆகியோருடன் மேயர் பிரியாவும் சேர்க்கப்பட்டுள்ளது திமுகவினரிடையே கடும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏராளமான சீனியர்கள் இருக்கும்போது பிரியா நுழைக்கப்பட்டது எப்படி என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள்.
தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி,
எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இருக்கிறார்கள்.
தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை
நடத்தும் குழுவில் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, இ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
ஆகியோர் இருக்கிறார்கள்.
இந்த பட்டியல் எதிலும் துரைமுருகன் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
துரைமுருகன் உடல்நலம் காரணமாக நியமிக்கவில்லை என்று சொல்லப்பட்டாலும், அவருக்கு ஓய்வு
கொடுப்பதற்காகவே புறக்கணிக்கப்பட்டிருக்கிறாராம்.