Share via:
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா மீது நேற்று (செப்.12ம் தேதி) காவல் நிலையத்தில் மாலை 4 மணியளவில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. 25 பக்கங்களைக் கொண்ட அந்த முதல் தகவல் அறிக்கையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா தனது மனைவி மற்றும் மகள் உள்ளிட்ட குடும்பத்தார் மீது வாங்கியுள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் குறித்த அனைத்து தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
அதில், கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தி.நகர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த தி.நகர் சத்யா தனது மனைவி ஜெயச்சித்ரா மற்றும் 2 மகள் மீது அசையும் அசையா சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்.
தி.நகர் சத்யா, சென்னை வடபழனி மற்றும் விழுப்புரத்தில் டாஸ்மாக் கடை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து விவசாய நிலம் மற்றும் புறம்போக்கு நிலத்தை தனது பெயரிலும், தன்னுடைய குடும்பத்தினரான மனைவி ஜெயச்சித்ரா மற்றும் மகள் கவிதா என்பவரின் பெயருக்கும் மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
தனது மனைவி ஜெயசித்ரா பெயரில் 10,800 சதுரடி அடி நிலத்தை மும்முடிக்குப்பம் கிராமத்தில் 1 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில் வாங்கியுள்ளார்.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள பத்மாவதி டவர்சில் 4வது மாடியில் 1,250 சதுரடி கொண்ட அப்பார்ட்மெண்ட்டை 9 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.
சென்னை எழும்பூர், நுங்கம்பாக்கம் தாலுகாவில் மகள் கவிதாவிடம் இருந்து 2,100 சதுரடி கொண்ட கட்டிடத்தின் செட்டில்மெண்ட் பத்திரத்தை பெற்றுள்ளார். இதற்கான பத்திரங்கள் கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8ம் தேதி கோடம்பாக்கத்தில் நடைபெற்றுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22ம் தேதி தனது மனைவி ஜெயசித்ராவிடம் இருந்து கோடம்பாக்கம் பரமேஸ்வரி காலனியில் 1,190 சதுரடி கொண்ட கட்டி முடிக்கப்படாத வீட்டிற்கான செட்டில்மெண்ட் பத்திரத்தை பெற்றுள்ளார். இதற்கான பத்திரம் கோடம்பாக்கத்தில் பதியப்பட்டுள்ளது.
அதேபோல் வடபழனியில் 1,200 சதுரடி கொண்ட 2,400 சதுரடி நிலத்தின் பகிர்வான செட்டில்மெண்ட் பத்திரத்தினை பெற்ற சத்யநாராயணன் கோடம்பாக்கத்தில் பத்திரம் செய்துள்ளார்.
சென்னை வடபழனியில் உள்ள ஸ்ரீ சாய்ராஜ் பிளாட்ஸ், பிளாட் எண் 47. அழகிரி நகர் மெயின் ரோடு, வடபழனி நிலம் 75 சதுர அடி 530 சதுர அடி கட்டப்பட்ட பகுதியின் செட்டில்மென்ட் பத்திரத்தைப் பெற்றிருந்தார். இதன் பத்திர பரிவர்த்தனை 2014ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி நடைபெற்றுள்ளது.
சென்னை வடபழனியில் உள்ள ஆதிமூலபெருமாள் கோவில் தெருவில் 1,716 சதுரடி கொண்ட செட்டில் மெண்ட் பத்திரத்தை பெற்று கடந்த 22.08.2014ம் ஆண்டு கோடம்பாக்கத்தில் பத்திர பரிவர்த்தனையை மேற்கொண்டுள்ளார்.
திருவள்ளூர் தாலுகா, மும்மொடிகுப்பம் கிராமத்தில், 1.97 சென்ட் கொண்ட செட்டில்மெண்ட் பத்திரத்தை பெற்று, 22.08.2014ம் ஆண்டு கோடம்பாக்கத்தில் பத்திர பரிவர்த்தனை மேற்கொண்டுள்ளார்.
அதேபோல் தாம்பரம் தாலுகா செம்மஞ்சேரியில் 2,400 சதுரடி கொண்ட செட்டில்மெண்ட் பத்திரத்தை பெற்று 22.08.2014ம் ஆண்டு பத்திர பரிவர்த்தனையை மேற்கொண்டுள்ளார்.
கும்மிடிப்பூண்டி தாலுகா திருவள்ளூரில் 0.98 சென்ட் விவசாய நிலத்தின் பவர் ஆப் அட்டார்னி பத்திரத்தை பெற்று 31.10.2014ம் ஆண்டு கும்மிடிப்பூண்டி சப் ரெஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் பத்திர பரிவர்த்தனை மேற்கொண்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் தடாவில் உள்ள கருரு கிராமத்தில், 1 ஏக்கர் மற்றும் 8.5 சென்ட் கொண்ட நிலத்தை 21,70,000 ரூபாய்க்கு வாங்கி விற்பனை பத்திரமாக சூலூர் பேட்டை சப் ரெஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார்.
ஆந்திர மாநிலம் தடா கருரு கிராமத்தில் 3 சென்ட் காலி நிலத்தை 73 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய நிலையில், பத்திர பரிவர்த்தனையை சூலூர் சப்&ரெஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார்.
ஆரம்பாக்கம் கிராமம் கும்மிடிப்பூண்டி தாலுகா, திருவள்ளூரில் 2.12 ஏக்கர் விவசாய நிலத்திற்கான ஜெனரல் பவர் ஆப் அட்டார்னியின் பத்திர பரிவர்த்தனையை கும்மிடிப்பூண்டி சப் ஜெரிஸ்டிரார் அலுவலகத்தில் பதிந்துள்ளார்.
அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் கிராமத்தில் 0.99 சென்ட் விவசாய நிலத்திற்கான ஜெனரல் பவர் ஆப் அட்டார்னியை பெற்ற அவர், 04.06.2015ம் ஆண்டு கும்மிடிப்பூண்டி சப் ரெஜிஸ்டிரார் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார்.
சென்னை வடபழனியில் 1756 சதுர அடியில் தோராயமாக 1.5 கோடி செலவில் 1வது தளம் மற்றும் 1755 சதுர அடியில் 2வது தளம் கொண்ட திட்ட அனுமதி 29.05.2013 அன்று பெற்றுள்ளார்.
தனது பெயரில் ரூ.5,86,445 மதிப்புள்ள மாருதி சுசுகி ஸ்விஃப்ட் டிசையர் விடிஐ காரை வாங்கிய சத்யா, அந்த காரை கடந்த 05.05.2008 அன்று பதிவு செய்துள்ளார்.
தனது மனைவி ஜெயசித்ரா பெயரில் 21,14,072 ரூபாய் மதிப்புள்ள பார்ட்ச்யூனர் காரை வாங்கிய நிலையில் அதனை 27.05.20210 அன்று பத்திரப்பதிவு செய்துள்ளார்.
38,681 ரூபாய்க்கு மோட்டார் சைக்கிள் வாங்கப்பட்ட நிலையில் அதனை கடந்த 26.05.2010 அன்று பதிவு செய்துள்ளார்.
தி.நகர் சத்யா 12,49,271 ரூபாய் மதிப்பிலான ரெனால்ட் டஸ்டர் காரை வாங்கி அதனை கடந்த 08.11.2012ம் ஆண்டு சென்னையில் பதிவு செய்துள்ளார்.
செக்யூரிட்டி இல்லாத கடனாக 49 லட்சம் ரூபாயை தி.நகர் சத்யாவின் மகள் கோயம்புத்தூர் மாவட்டம் புதூரில் உள்ள மகாராஜா ஹாட் சிப்சுக்கு கடந்த 2013ம் ஆண்டு கொடுத்துள்ளார்.
அதேபோல் ரூ.70,35,000 ரூபாய் அளவுக்கு சத்யாவின் மகள் கவிதா, சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் இட்லி அண்ட் இட்லி அசோசியேசனுக்கு செக்யூரிட்டி இல்லாத கடனாக கொடுத்துள்ளார்.
சத்யா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், தடா (ஆந்திரா) உள்ளிட்ட இடங்களில் வாங்கியுள்ள அசையா சொத்துக்களின் விவரம் வருமாறு:& (17.03.2021 காலகட்டத்தில்)
தடாவில் (ஆந்திரா) 0.60 சென்ட் நிலத்தை 3,30,250 மதிப்பிலான நிலத்தை வாங்கிய நிலையில் பத்திர பரிவர்த்தனையை கடந்த 28.01.2017ம் ஆண்டு சூலூர்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார்.
அதே போல் 968 சதுரடி கொண்ட நிலத்தை கருரு கிராமம் தடாவில் 10,40,850 செலுத்தி வாங்கிய சத்யா, அதற்கான பத்திர பரிவர்த்தனையை கடந்த 28.01.2017ம் ஆண்டு சூலூர் பேட்டை துணை பத்திரப்பதிவு அலுவலகத்தில் மேற்கொண்டார்.
தடா கருரு கிராமத்தில் 0.76 சென்ட் நிலத்தை ரூ.4,18,250 கொடுத்து வாங்கிய தி.நகர் சத்யா அதற்கான பத்திர பரிவர்த்தனையை கடந்த 28.01.2017ம் ஆண்டு சூலூர்பேட்டை துணை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார்.
தடா கருரு கிராமத்தில் 1.82 ஏக்கர் நிலத்தை ரூ.39,72,950 கொடுத்து வாங்கிய தி.நகர் சத்யா அதற்கான பத்திர பரிவர்த்தனையை கடந்த 28.01.2017ம் ஆண்டு சூலூர்பேட்டை துணை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார்.
தடா கருரு கிராமத்தில் 968 சதுரடி நிலத்தை ரூ.10,40,850 கொடுத்து வாங்கிய தி.நகர் சத்யா அதற்கான பத்திர பரிவர்த்தனையை கடந்த 15.03.2017ம் ஆண்டு சூலூர்பேட்டை துணை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார்.
கொடைக்கானல் தாலுக்கா, வில்பட்டி கிராமத்தில் 25 சென்ட் நிலத்தை ரூ.2,22,235 கொடுத்து வாங்கிய நிலையில், அதற்கான பத்திரப் பரிவர்த்தனையை கடந்த 18.06.2018ம் ஆண்டு கொடைக்கானலில் மேற்கொண்டுள்ளார்.
அதேபோல் கொடைக்கானல் தாலுக்கா, வில்பட்டி கிராமத்தில் 25 சென்ட் நிலத்தை ரூ.2,22,935 கொடுத்து வாங்கிய நிலையில், அவருடைய பெயரில் அதற்கான பத்திரப் பரிவர்த்தனையை கடந்த 18.06.2018ம் ஆண்டு கொடைக்கானலில் மேற்கொண்டுள்ளார்.
கருரு கிராமம், தடாவில் 7 சென்ட் நிலத்தை 4,37,780 கொடுத்து தனது பெயரில் வாங்கிய சத்யா, அதனை தனது மனைவி ஜெயசித்ரா பெயரில் கடந்த 30.01.2019ல் சூலூர் பேட்டை துணை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தார்.
கும்மிடிப்பூண்டி தாலுகா, திருவள்ளூர் மாவட்டத்தில் 300 சென்ட் விவசாய நிலத்தை 55,78,004 ரூபாய் கொடுத்து வாங்கிய தி.நகர் சத்யா, அதனை தனது பெயரில் கடந்த 09.09.2019ம் ஆண்டு கும்மிடிப்பூண்டியில் பத்திரப்பதிவு செய்தார்.
கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கம் கிராமத்தில் ரூ.22,51,697 ரூபாய் கொடுத்து 1 ஏக்கர் மற்றும் 49 சென்ட் விவசாய நிலத்தை வாங்கிய தி.நகர் சத்யா அதனை தனது பெயரில் 09.09.2019 அன்று பத்திரப்பதிவு செய்து கொண்டார்.
கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கம் கிராமத்தில் ரூ.27,50,397 ரூபாய் கொடுத்து 1 ஏக்கர் மற்றும் 33 சென்ட் விவசாய நிலத்தை வாங்கிய தி.நகர் சத்யா அதனை தனது பெயரில் 09.09.2019 அன்று பத்திரப்பதிவு செய்து கொண்டார்.
கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கம் கிராமத்தில் ரூ.19,70,985 ரூபாய் கொடுத்து 1 ஏக்கர் மற்றும் 6 சென்ட் விவசாய நிலத்தை வாங்கிய தி.நகர் சத்யா அதனை தனது பெயரில் 09.09.2019 அன்று பத்திரப்பதிவு செய்து கொண்டார்.
கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கம் கிராமத்தில் ரூ.20,82,540 ரூபாய் கொடுத்து 1 ஏக்கர் மற்றும் 12 சென்ட் விவசாய நிலத்தை வாங்கிய தி.நகர் சத்யா அதனை தனது பெயரில் 09.09.2019 அன்று பத்திரப்பதிவு செய்து கொண்டார்.
கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கம் கிராமத்தில் ரூ.13,20,267 ரூபாய் கொடுத்து 71 சென்ட் விவசாய நிலத்தை வாங்கிய தி.நகர் சத்யா அதனை தனது பெயரில் 09.09.2019 அன்று பத்திரப்பதிவு செய்து கொண்டார்.
கருரு கிராமம், தடாவில் 2 ஏக்கர் மற்றும் 28 சென்ட் நிலத்தை ரூ.1,47,06,200க்கு வாங்கிய தி.நகர் சத்யா அதற்கான பத்திர பரிவர்த்தனையை தனது பெயரில் கடந்த 10.10.2019 அன்று சூலூர்பேட்டையில் மேற்கொண்டார்.
தடா, இருக்கம்கிராமம் பஞ்சாயத்தில் 1 ஏக்கர் மற்றும் 50 சென்ட் நிலத்தை ரூ.3,54,950க்கு வாங்கிய சத்யா அதற்கான பத்திரப்பதிவை தனது பெயரில் சூலூர்பேட்டையில் மேற்கொண்டார்.
கும்மிடிப்பூண்டி தாலுகா, தொக்கமூர் கிராமத்தில் 40 சென்ட் விவசாய நிலத்தை ரூ.7,26,615க்கு வாங்கிய சத்யா, அதற்கான பத்திரத்தை தனது பெயரில் சூலூர்பேட்டையில் நடத்தி முடித்தார்.
கும்மிடிப்பூண்டி தாலுகா, தொக்கமூர் கிராமத்தில் 65 சென்ட் நிலத்தை ரூ.12,08,667க்கு வாங்கிய சத்யா அதனை சூலூர்பேட்டையில் தனது பெயரில் பத்திர பரிவர்த்தனை செய்து கொண்டார்.
கும்மிடிப்பூண்டி தாலுகா, திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் 1 ஏக்கர் விவசாய நிலத்தை ரூ.18,48,639 கொடுத்து வாங்கிய சத்யா, அதனை தனது பெயரில் பத்திரப் பரிவர்த்தனையை கும்மிடிப்பூண்டியில் செய்து முடித்தார்.
அதே போல் தடாவில் உள்ள கருரு கிராமத்தில் 161.33 சதுரடி யார்டை 5,37,700 ரூபாய்க்கு வாங்கிய அவர், தனது பெயரில் 12.12.2019 அன்று சூலூர்பேட்டையில் பத்திரப்பதிவு செய்து கொண்டார்.
கும்மிடிப்பூண்டி தாலுகா, திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கம் கிராமத்தில் 80 சென்ட் விவசாய நிலத்தை ரூ.14,22,875க்கு வாங்கிய சத்யா, அதனை தனது பெயரில் கடந்த 29.05.2020 அன்று கும்மிடிப்பூண்டியில் பதிவு செய்தார்.
1. தி.நகர் சத்யா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கடந்த 13.05.2016 அன்று அசையும் மற்றும் அசையா, பாதுகாப்பற்ற கடன் போன்ற வடிவங்களில் மதிப்பிடப்பட்டுள்ள சொத்துக்களின் மதிப்பு ரூ.3,21,42,036.95 என்று தெரியவந்துள்ளது.
2. அதே போல் 17.032021ம் தேததியன்று சத்யா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் (முதலீடு, காலியான நிலம், பிளாட், விவசாய நிலம் மற்றும் வாகனங்கள்) ஆகியவை வாங்கியதன் பேரில் ரூ.16,44,74,365.87 என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
3. 13.05.2016 முதல் 17.03.2021 அன்று வரையிலான காலத்தில் (சம்பளம், வாடகை வருமானம், தொழில் வருமானம், விவசாய வருமானம் மற்றும் பாதுகாப்பற்ற கடன்) வழியாக ரூ.16,18,59,574.19 என்று கணக்கிடப்பட்டுள்ளது.
4. செலவினங்களை பொறுத்த வரையில் கடந்த 13.05.2016 முதல் 17.03.2021 வரையிலான காலகட்டத்தில் (குடும்ப செலவினம், சம்பளம், சொத்து வரி, வருமான வரி, நகைக்கடன் திருப்பி செலுத்துப்பட்டது, வாகனக் கடன் திருப்பி செலுத்தியது, காப்பீடு தொகை மற்றும் பாதுகாப்பற்ற கடன்) ஆகியவற்றின் கணக்கீட்டின் படி செலவினம் ரூ.5,59,67,898.50 என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
5. சொத்துக்களின் மதிப்பீடு பற்றி குறிப்பிடும் போது கடந்த 13.05.2016 முதல் 17.03.2021 வரையிலான காலகட்டத்தில் சத்யா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் 13,23,32,328.92 ரூபாய் என்று தெரியவந்துள்ளது.
6. சேமிப்பு வகையிலான கணக்கீட்டின் படி கடந்த 13.05.2016 முதல் 17.03.2021 வரையிலான காலகட்டத்தில் 3வது மற்றும் 4வது ஆகியவற்றை சேர்த்து 6வது கணக்கீட்டின் படி ரூ.10,58,91,675.69 மதிப்பிடப்பட்டுள்ளது.
7. கடந்த 13.05.2016 முதல் 17.03.2021வரையிலான காலகட்டத்தில் சத்யா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்து மதிப்பு. (எண் 5 மற்றும் 6 சேர்த்து 7வது கணக்கிடப்பட்டுள்ளது) அதன்படி ரூ.2,64,40,653.23 என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி சொல்லப்பட்டுள்ள சத்யா மற்றும் அவரது குடும்பத்தாரின் சொத்துக்களின் மதிப்பானது கடந்த 13.05.2016 முதல் 17.03.2021 வரையில் ரூ.13,23,32,328.92 என்றும் தெரியவந்துள்ளது. மேலும் சத்யா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களால் வருமானத்தில் இருந்து செலவை கழிப்பதன் மூலம் கிடைக்கும் தொகை ரூ.10,58,91,675.69 என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சத்யா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களும் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ஏறக்குறைய ரூ.2,64,40,653.23 மதிப்பில் பெற்றுள்ளனர். இது அறியப்பட்ட ஆதாரங்களை விட 16.33 சதவீதம் அதிகமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கடந்த 2016 முதல் 2021ம் ஆண்டு வரையில் தி.நகர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக பதவி வகித்த சத்யா சட்டவிரோதமாக வைத்திருந்த சொத்துக்களின் மதிப்பீடு வெளியாகியுள்ளது.
இதன் அடிப்படையில் தி.நகர் சத்யா பெயரில் சென்னையில் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் 13(2), 13 (1) ஊழல் தடுப்புச் சட்டம் ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாணையுடன் சென்னை ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகளின் விசாரணைக்காக மாண்புமிகு சிறப்பு நீதிபதி, சிறப்பு நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. மற்றும் முதல் தகவல் அறிக்கை தலைமையகத்திற்கு அனுப்பப்படுகிறது. மேலும் இந்த வழக்கை மேலதிக விசாரணைக்காக டி.எஸ்.பி. கந்தசாமிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 25 பக்கங்களைக் கொண்ட முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள புகார்களின் சாராம்சங்கள் குறித்து தற்போது கிடைத்துள்ள தகவல்கள் விளக்குகின்றன.