Share via:
துக்ளக் ஆண்டுவிழா
நடக்கும் தருணங்களில் ஏதேனும் பரபரப்பைக் கிளப்பும் வகையில் பேசுவது குருமூர்த்தியின்
வழக்கம். அ.தி.மு.க.வினருக்கு ஆண்மையே இல்லை, நான் சொன்னதைக் கேட்டுத்தான் ஓ.பி.எஸ்.
தர்மயுத்தம் நடத்தினார் என்றெல்லாம் பேசி சலசலப்பை ஏற்படுத்துவார்.
அந்த வகையில் இப்போது
நடந்துமுடிந்திருக்கும் விழாவில், ரஜினிகாந்த் அரசியலுக்கு வர இருந்தபோது, அண்ணாமலையைத்தான்
முதல்வர் வேட்பாளர் என்று முடிவு செய்திருந்தார், இதுகுறித்து என்னிடம் ஆலோசித்தார்
என்று கூறியிருக்கிறார் குருமூர்த்தி.
அந்த நேரத்தில் அண்ணாமலை
அரசியலுக்கே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து இங்கே
ஆள்வதற்கு அப்போது கர்நாடகாவில் ஐ.பி.எஸ். பணியில் இருந்த அண்ணாமலையை முடிவு செய்திருந்தார்
என்பது தமிழகத்தில் அவர் யாரையும் நம்பவே இல்லை என்று அவமானப்படுத்துவது போல் உள்ளது
என்றாலும் இன்னமும் இதற்கு ரஜினிகாந்த் அமைதியாக இருப்பதுதான் அவரது ரசிகர்களையே வேதனைப்படுத்தியிருக்கிறது.
குருமூர்த்தி சொல்வது
உண்மையா இல்லையா என்று சொல்வதற்குக்கூட ரஜினிகாந்த் பயப்படுகிறார் என்றால், அடேங்கப்பா…
எப்பேர்ப்பட்ட நடிகனப்பா…. குருமூர்த்தி மனதை புண்படுத்தினால் பா.ஜ.க. வேதனைப்படும்
என்று நினைக்கிறாரா…
வாயைத் திறங்க ரஜினி