Share via:
வெளி மாவட்டங்களிலிருந்து பணி நிமித்தமாக சென்னைக்கு வரும் பெண்
காவலர்கள் தங்குவதற்கு வால்டாக்ஸ் ரோடு ஐசக் தெருவில் பழைய பெண் காவலர்கள் ஓய்வு இல்லம்
பயன்பாட்டில் இருந்துவந்தது.
அந்த இல்லத்தில் இருந்த பழுதுகளை நீக்கி, புனரமைக்கப்பட்ட பெண்
காவலர்கள் ஓய்வு இல்லத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் திறந்துவைத்து
பார்வையிட்ட்டார். இந்த ஓய்வு இல்லத்தில் 21 அறைகள் மற்றும் 15 படுக்கைகள் கொண்ட ஒரு
பொது அறையும் உள்ளன. எனவே, இங்கு பொது அறையில் 42 பெண் காவலர்களும், தனி அறைகளில் இருவர்
வீதம் 42 காவர்களும் தங்க முடியும். எனவே, வெளி மாவட்டங்களிலிருந்து வரும் பெண் காவலர்கள்
இனி இங்கு நல்ல வசதியுடன் தங்குவதற்கு இயலும்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் அஸ்ரா
கர்க், இணை ஆணையாளர்கள் அபிஷேக் தீட்சித், தேவராணி, துணை ஆணையாளர் ஸ்ரேயா குப்தா மற்றும்
பலர் கலந்துகொண்டனர்.