Share via:
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாகவும், அநாகரிகமாகவும்
சமூக வலைதளங்களில் பதிவு செய்து வந்த குற்றச்சாட்டில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த
நாம் தமிழர் சமூக ஊடகப் பிரிவு உறுப்பினர் காளியப்பன் கைது செய்யப்பட்டிருப்பது சீமான்
ஆதரவாளர்கள் மத்தியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து நாம் தமிழர் சாட்டை துரைமுருகன், ’முதல்வரின் உருவப்படத்திற்கு
செருப்பு மாலை போட்டு ஒப்பாரி வைத்த கன்னட அமைப்பினரை கண்டிக்க கூட வக்கற்ற திமுக!
உதயநிதியின் தலைக்கு 10 கோடி விதித்த வடநாட்டு சாமியாரை கைது செய்ய பயந்து நடுங்கிய
திமுக !
அறிவான ஐடி விங் என்ற பெயரில் ஆபாசங்களையும் வதந்திகளையும் பரப்பி
ஊடகவியலாளர் தொடங்கி நடுநிலையாளர்களை வசைபாடும் கூட்டத்தை வளர்த்து விடும் திமுக டிவிட்டரில்
பதிவிட்டார் என்பதற்காக தம்பி காளியை கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கைது,சிறையால் ஒருவரின் கருத்தை முடக்கி விடலாம் என நினைப்பது
மடத்தனம். இன்னும் பல மடங்கு திமுகவின் அயோக்கியதனத்தை வெளிக்கொண்டு வரவே இது போன்ற
அடக்குமுறைகள் உதவும் என்று குமுறியிருக்கிறார்.
ஏற்கெனவே சமூக வலைதளங்களில் தி.மு.க.வை திட்டித் தீர்த்துக்கொண்டிருக்கும்
நாம் தமிழர் கூட்டத்தினர் தொடர்ந்து வசை பாடத் தொடங்கிவிட்டார்கள்.
ஸ்டாலினுக்கு இறுதிச் சடங்கு நடத்துவது போன்று அவதூறு செய்வதையெல்லாம்
ஏற்கவே முடியாது. ஆதரவு கொடுத்து அந்த படங்களை வெளியிட்டால் மேலும் சிலரை தூக்கி உள்ளே வைக்கவேண்டியிருக்கும் என்று
தி.மு.க.வினர் பதில் பாடிக்கொண்டு இருக்கிறார்கள்.