Share via:
நீண்ட காலமாக உடல் நலமின்றி விஜயகாந்த் மரணம் அடைந்திருந்தார்
என்றாலும், அவருக்கு சென்னையில் குவிந்த கூட்டமும் தினம் தினம் அவரது சமாதிக்கு வந்து
சேரும் மக்கள் எண்ணிக்கையும் இன்னமும் குறையவே இல்லை.
இந்த நிலையில் விஜயகாந்த் நடித்த பழைய படங்களை தூசு தட்டி திரையில்
வெளியிடும் வேலைகள் ஜரூராக நடந்துவருகின்றன. இப்போதே தென் தமிழகத்தின் பெரும்பாலான
தியேட்டர்களில் விஜயகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.
வெளியூர்களில் திரையிடப்படும் படங்களை பார்ப்பதற்கு ரசிகர்கள்
படையெடுத்து வருகிறார்கள். ஆகவே, சென்னையிலும் விஜயகாந்த் படங்களை திரையிடுவதற்கு வேலைகள்
நடந்து வருகின்றன.
குறிப்பாக ரமணா, கேப்டன் பிரபாகரன், வைதேகி காத்திருந்தாள், பூந்தோட்டக்
காவல்காரன், அம்மன்கோயில் கிழக்காலே, வானத்தைப் போல போன்ற படங்களை வெளியிட பெரிய போட்டியே
நடக்கிறதாம்.
அந்த அளவுக்கு மக்கள் மனதில் நிறைந்திருக்கிறார் விஜயகாந்த்.