Share via:
கனிமொழி எம்.பி. இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சரும் அவரது சகோதரருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. துணை பொது செயலாளருமான கனிமொழி இன்று (ஜன.5) பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தனது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சகோதரரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தென்மாவட்டங்களை புரட்டிப் போட்ட பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கனிமொழி எம்.பி. நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார். தொடர்ந்து தென் மாவட்டங்களில் முகாமிட்டிருந்த கனிமொழி எம்.பி. அரசு நிகழ்ச்சிகளுக்காக சென்னை வந்து செல்வதுமாக இருக்கிறார்.
இதற்கிடையில் பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகத்தையும் கனிமொழி எம்.பி. பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இப்படி அரசுப்பணிகளிலும், மக்கள் பணிகளிலும் தொடர்ந்து பம்பரமாக சுற்றி பணியாற்றி வரும் கனிமொழி எம்.பி. தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுவதை முன்னிட்டு தி.மு.க. தொண்டர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.