Share via:
தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகத்தின் 2022& 23ஆம் நிதியாண்டிற்கான அரசின் பங்கு ஈவுத்தொகையாக ரூ.18 கோடியே 61 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் கே.என்.நேரு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.
தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகத்தின் 2022- 23ஆம் நிதியாண்டிற்கான அரசின் பங்கு ஈவுத்தொகையாக ரூ.18 கோடியே 61 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் கே.என்.நேரு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.
இந்த சந்திப்பின் போது பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கைத்தறி, துணிநூல் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆர்.காந்தி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கூடுதல் தலைமை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.