Share via:
கடந்த ஒன்பது ஆண்டுகளாக மோடி அரசாங்கம் பட்ஜெட் தாக்கல் செய்திருந்தாலும்,
நேரடியாக மக்கள் பயன்படும் வகையில் எந்த ஒரு மெகா அறிவிப்பும் செய்ததில்லை. இந்த நிலையில்
இன்னும் நான்கு மாதங்களில் தேர்தலை சந்திக்கவேண்டிய சூழல் மோடிக்கு இருக்கிறது. ஆகவே,
பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கும் பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் இருக்கும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா தாக்கல் செய்யப்படவுள்ள
பட்ஜெட் ஒரு இடக்கால பட்ஜெட்டாக இருக்கும் என்றாலும் தேர்தல் நேரத்தில் மக்களை மகிழ்விக்கும்
வகையில் நிறைய அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல் விலை நிர்ணயத்திற்கும் மத்திய அரசுக்கும் தொடர்பு இல்லை
என்று கூறிவந்தாலும், பெட்ரோல் விலையை குறைத்து விற்பனை செய்வதற்கு அறிவிப்பு வெளியாகும்
என்று தெரிகிறது. அதேபோல் வருமான வரிச் சலுகை, கடன் வட்டி குறைப்பு போன்ற சலுகைகள்
இருக்கும்.
ரயில்வே பட்ஜெட்டில் இத்தனை நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்
சீனியர் சிட்டிசன்களுக்கான டிக்கெட் தொகை சலுகை மீண்டும் கிடைக்கும் என்று தெரிகிறது.
இவை தவிர கேஸ் மானியம், வீட்டு சலுகை போன்றவையும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
மூன்றாவது முறையும் ஆட்சியைப் பிடிக்கணுமே….